நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியா? - கமலஹாசன் பதில் என்ன?

கோவை - அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நாடாளுமன்ற தேர்தல் குறித்து கோவை, சேலம் மண்டல பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக கூட்டத்திற்கு பின் பேசிய கமல்ஹாசன், நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.


கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை - அவிநாசி சாலை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பிருந்தாவன் திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் தலைமையில் கோவை மற்றும் சேலம் மண்டல பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இந்த ஆலோசனை கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.



ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமலஹாசன் பேசியதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் கோவையில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு இது குறித்து முடிவெடுக்க இங்கு கூட்டம் கூடி இருக்கின்றோம், இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்படும்.

பெங்களூருவுக்கு பிரச்சாரத்திற்கு செல்வது குறித்து நாளை முடிவு அறிவிக்கப்படும். இது நாங்கள் பேசுவதற்கான கூட்டம், என்ன பேசி இருக்கிறோம் என்பது ரகசியம்.

சட்டமன்றத்தில் தவறவிட்டதை நாடாளுமன்றத்தில் பெற திட்டமா என கேள்வி எழுப்பியதற்கு, இருக்கலாம் அது நல்ல எண்ணம் தானே என பதிலளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...