ரேஷன் கடைகளில் கியூஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை - முதல் கட்டமாக கோவையில் இன்று தொடக்கம்!

கடந்த ஆட்சியில், ரேஷன் அரிசிக் கடத்தலை தடுக்க சென்னை, மதுரை உள்ளிட்ட இரண்டு இடங்களில் மட்டுமே கூடுதல் போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்ட்டனர். தற்போதைய ஆட்சியில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதல்நிலை மண்டல மேலாளர்கள் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர்களின் மாநில அளவிலான பணி முன்னேற்ற ஆய்வு கூட்டம் நடைபெற்றது.



உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு, மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலை வகித்தார்.

இதில், கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார், கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது:



உணவு வழங்கல் துறை சார்பாக தரமான பொருட்கள் வழங்க முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் தரமான அரிசியை வழங்கி வருகிறோம். 10 லட்சம் மெட்ரிக் டன் நெல் சேமித்து வைக்க முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். ரேஷன் கடைகளில் தரமான பொருட்கள் வழங்கவும், ஆய்வு மேற்கொள்ளவும் தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

747 ஆலைகளில் கருப்பு, பழுப்பு இல்லாத அரிசியை தரம் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 14 லட்சம் பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக் மற்றும் கண் ஸ்கேன் மூலம் பொருட்களை வழங்க டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆண்டு தோறும் சிறுதானிய உணவு திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அனைத்து ரேஷன் கடைகளில் பணம் இல்லாமல் கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்து பண பரிவர்த்தனை செய்து உணவு பொருட்களைப் பெறும் திட்டம் இன்று முதற்கட்டமாக கோவையில் துவங்கப்பட்டுள்ளது. 1500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டை உள்ள ரேஷன் கடைகளை பிரித்து மேலும் ரேஷன் கடைகள் கட்ட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.



வாடகை கட்டத்தில் உள்ள ரேஷன் கடையை மாற்றி சொந்தக் கடை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 75சதவீத மனுக்கள் இன்று தீர்வு காணபட்டுள்ளது. கோதுமையை பொறுத்தவரை மத்திய அரசு குறைவாக கொடுத்துள்ளதால் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மண்ணெண்ணெய் மத்திய அரசிடம் இருந்து பெறமுடியவில்லை. தட்டுப்பாட்டை போக்க மண்ணெண்ணெய் வாங்கி மானிய விலையில் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பருப்பு, பாமாயில், சக்கரை உள்ளிட்டவை உற்பத்தி செய்யும் இடத்தில் வாங்கி மானிய விலையில் கொடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த ஆட்சியில், ரேஷன் அரிசிக் கடத்தலை தடுக்க சென்னை, மதுரை உள்ளிட்ட இரண்டு இடங்களில் மட்டுமே கூடுதல் போலீஸ் அதிகாரி நியமிக்கப்பட்ட்டனர். தற்போதைய ஆட்சியில், ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க பல்வேறு மாவட்டங்களில் கூடுதல் எஸ்பி, டிஎஸ்பி அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Newsletter

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...

கோவையில் விசா காலம் முடிந்தும் சட்டவிரோதமாக தங்கிய 3 வெளிநாட்டவர்கள் முகாமில் அடைப்பு

உகாண்டாவைச் சேர்ந்த இரு பெண்கள் மற்றும் ருவாண்டாவைச் சேர்ந்த ஒருவர் என மூன்று வெளிநாட்டினர், விசா காலம் முடிந்த பின்னரும...

Three Foreign Nationals Face Deportation for Visa Overstay in Coimbatore

Three foreign nationals — two from Uganda and one from Rwanda — who were allegedly found staying in Coimbatore beyond th...

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

பொள்ளாச்சி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், சமத்த...

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10.09.2026) மின்தடை

கோவில்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் ச...