கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்குவதில் சிக்கல்!

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பயணிக்கும் மற்ற விமான நிலையங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட 1,30,000 என்ற இருக்கைகளின் எண்ணிக்கையை மத்திய அரசு உயர்த்தாததே கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படாததற்கு காரணம் என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்படாததற்கு இருக்கைகள் எண்ணிக்கையை மத்திய அரசு அதிகரிக்காததே காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த விமான சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஷார்ஜா, சிங்கப்பூர் ஆகிய 2 வெளிநாடுகளுக்கு மட்டுமே தற்போது நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

கோவையில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை துபாய்க்கு நேரடி விமான சேவை தொடங்கப்படவில்லை.

இதுதொடர்பாக விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது, இந்தியாவில் இருந்து துபாய்க்கு வாரந்தோறும் 65,000 பயணிகள் வீதம் 1,30,000 இருக்கைகள் (வருகை, புறப்பாடு சேர்த்து) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப அதிக வரவேற்பு கிடைத்துள்ள விமான நிலையங்களில் இருந்து துபாய்க்கு நேரடி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவை - துபாய் இடையேயான நேரடி விமான சேவை தொடங்க கடந்த 2006 - 2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பைலேட்ரல் ஒப்பந்தம் கையெழுத்தானது. கோவையில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா, இலங்கை மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை இயக்கலாம்.

கோவை - துபாய் இடையே விமான சேவை தொடங்க தொழில் அமைப்பு நிர்வாகிகள் முதலில் விமான சேவை தொடங்கினால் லாபகரமாக இயக்கலாம் என்பதை அந்நாட்டு விமான நிறுவனத்துக்கு புரிய வைக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் வேறு விமான நிலையங்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ள, துபாய் நாட்டுக்கான இருக்கைகளின் எண்ணிக்கையை குறைத்து கோவைக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

இல்லையெனில் இந்தியாவிலிருந்து துபாய்க்கு வாரந்தோறும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இருக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே கோவை - துபாய் இடையே நேரடி விமான சேவை தொடங்க முடியும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...