மே.20ல் பொள்ளாச்சி ஆழியார் நீர்த்தேக்க திட்ட குழு தலைவர் தேர்தல் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

ஆழியாறு பாசனத் திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக துணை ஆட்சியர் பிரியங்கா செயல்படுவார். திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்தார்.


கோவை: ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் நடைபெறும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பி.ஏ.பி. பாசனத் திட்டத்தில் ஆழியாறு அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்தில் 6,400 ஏக்கர் விளைநிலங்களும் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி. பரம்பிக்குளம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் ஆழியாறு பாசனப்பகுதியை சேர்ந்த 21 நீரினை பயன்படுத்துவோர் சங்கங்கள் உள்ளன.

இந்த சங்கங்களுக்கான தேர்தல் கடந்த மார்ச் மாதம் பகிர்மான குழு தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த நிலையில், ஆழியாறு நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நாளை மறுநாள் (20-ந் தேதி) நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ளார்.

அதில், ஆழியாறு பாசனத் திட்டக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்காக தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு தேர்தல் அலுவலராக துணை ஆட்சியர் பிரியங்கா செயல்படுவார். திட்டக்குழு தலைவருக்கான தேர்தலுக்கு வேட்பு மனுக்கள் காலை 8.30 மணி முதல் 9.30 வரை பெற்றுக் கொள்ளலாம்.

வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்தல் மற்றும் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடுதல் காலை 9.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். காலை 10 மணி முதல் 10.30 மணி வரை வேட்பு மனுக்கள் திரும்பப்பெறுதல் நடக்கிறது. வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் காலை 10.45 மணிக்கு வெளியிடப்படுகிறது.

11.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதன் பின்னர் உடனடியாக பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இதில், திட்டக்குழு தலைவரை தேர்ந்து எடுப்பதற்காக 4 பகிர்மான குழு தலைவர்களும், அசல் தேர்தல் சான்றிதழுடன் வர வேண்டும். அதனைத்தொடர்ந்து, திட்டக்குழு உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தல் நடைபெறும். இதில் ஓட்டுப்பதிவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...