கோவையில் திமுகவை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

திமுக ஆட்சியில் கள்ளச்சாராய சாவு, போதை பொருட்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் நடைபெறுவதாக கூறி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக இன்று கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



அதிமுக கோவை மாநகர மாவட்ட கழகத்தின் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை மாநகர மாவட்ட செயலாளரும், வடக்கு சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.



திமுக ஆட்சியில் நிலவும் கள்ளச்சாராய சாவு, போதை பொருட்கள் புழக்கம், சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவினர் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், முன்னாள் மேயர் வேலுச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...