கோவை டாடாபாத்தில் உள்ள அறிவியல் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை டாடாபாத்தில் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையர் பிரதாப், நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டார்.



கோவை: டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். 



கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை, ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன. 



மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 



இந்த நிலையில் பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, பெரிய கடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 1.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோட்டார் இல்லாத வாகன போக்குவரத்து திட்டத்தில் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார். 

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவிப் பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...

அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் உயர்ந்துள்ளது. ஜூலை 2ஆம...

கோவை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் ஜூலை 2ம் தேதி நிலவரப்படி வெளியாகியுள்ளது. மழைப்பொ...

காந்திபுரத்தில் பாட்டிலில் பெட்ரோல் தர மறுத்த ஊழியரை தாக்கிய 2 பேர் கைது

கோவையில் தண்ணீர் கேனில் பெட்ரோல் நிரப்ப மறுத்த பங்க் ஊழியரை தாக்கிய வழக்கில் ரத்தினபுரியைச் சேர்ந்த ராகேந்திர பிரபு ராஜ...

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...