பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனை - உடனடி நடவடிக்கை தேவை என்று ஆட்சியரிடம் மக்கள் மனு

கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: பெட்டிக்கடை மற்றும் வீடுகளில் படுஜோராக நடைபெறும் போதைப்பொருள் விற்பனையை தடுக்காமல் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் புகார் கூறினர்.



கோவை மாவட்டம் சூலூர், செலம்பராயம்பாளையம் பகுதியில் பெட்டிக்கடையில் வைத்து மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யபட்டு வருவதாகவும் மாவட்ட ஆட்சியர் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் ஆறுமுகம் என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருவதாகவும் அங்கு சட்டவிரோதமாக மதுபானங்கள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்து வருவதாக தெரிவித்தனர்.

அவர் மட்டுமின்றி அங்கு ஜோதிமணி, சதீஷ், ஆகியோரும் சட்டவிரோதமாக வீடுகளில் வைத்தே மது விற்பனையில் ஈடுபடுவதாக தெரிவித்தனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தால் ஒருவரை மட்டுமே கைது செய்துள்ளதாக கூறினர்.



மேலும் பண பலத்தை கொண்டே அவர்கள் இவ்வாறு செயல்படுவதாக குற்றம் சாட்டிய பொதுமக்கள் அங்கு மது விற்பனை நடைபெறுவதால் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாகவும் எனவே மாவட்ட ஆட்சியர் உடனடியாக சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக் கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...