பொள்ளாச்சியில் இருந்து கோவை வழியாக திருச்செந்தூருக்கு இரவு நேர ரயில் இயக்க வேண்டும்: கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் கோரிக்கை

கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. இதில், நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.


கோவை: கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கோயமுத்தூர் மார்க்கெட் வியாபாரிகள் சங்க பொதுக்குழு கூட்டம் இந்திய தொழில் வர்த்தக சபை அரங்கில் நடந்தது. ஆர்.எஸ்.கணேசன் தலைமை தாங்கிய கூட்டத்தில் ராதாகிருஷ்ணன், பாரூக், ரமேஷ், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அப்துல் ரஹிமான் வரவேற்றார். பொதுக்குழு கூட்டத்தில் நிலவில் தென்துருவத்தில் சந்திரயான்-3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டு தெரிவிப்பது, கோவையில் இருந்து திருச்செந்தூருக்கு இரவுநேர விரைவு ரெயிலை பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை வழியாக இயக்குவதற்கான நடவடிக்கைகளில் சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் ஈடுபட வேண்டும், இயற்கை பேரிடர் மற்றும் தீ விபத்துகளால் பாதிக்கப்படும் வணிகர்களுக்கு உரிய இழப்பீடு மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும், பொட்டல பொருட்களுக்கு உரிமம் வழங்குவதில் இரட்டை முறையை மாற்றி அமைத்து உணவு பாதுகாப்பு துறையிடம் உரிமம் பெற்றால் போதும் என சட்ட விதிகளை மாற்றி அமைக்க வேண்டும், தியாகி குமரன் மார்க்கெட் நுழைவு வாயில் வளைவு பெயர் பலகை அமைத்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர் புதிய நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் ஆர்.எஸ்.கணேசன் புதிய தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...