கோவையில் ரயில் நிறுத்த வளாகம் அமைத்திடுக.!! ரயில்வே வாரிய தலைவருக்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கடிதம்!

கோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்தி பராமரிக்க பிட் லைன் அமைக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.


கோவை: போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைக்க வேண்டும் என்று ரயில்வே வாரியத் தலைவருக்உ நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடிதம் எழுதியுள்ளார்.

கோவை மற்றும் போத்தனூர் ரயில் நிலையங்களில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்தி பராமரிக்க பிட் லைன் அமைக்க வேண்டும் என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.

ரயில்வே வாரியத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கோவை தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரம் ஆகும். தென்னக இரயில்வேயில் அதிக வருமானம் ஈட்டும் நிலையங்களில் கோவை ரயில் நிலையம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இத்தகைய சிறப்பு மிக்க பகுதியில் இருந்து புதிய ரயில்கள் இயக்க கோரிக்கைகள் வைக்கும் போதெல்லாம் ரயில்வே நிர்வாகம், கோவை ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் நிறுத்திட போதிய இடவசதி இல்லாததால் புதிய ரயில்கள் அறிவிக்க இயலவில்லை என்று காரணம் சொல்லி வருகின்றது. இதன் காரணமாக கோவை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள போத்தனூர் ரயில் நிலையத்தில் பெட்டிகள் நிறுத்துமிடம் மற்றும் பராமரிப்பு மையம் அமைத்திட வேண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.

ஆனாலும் அக்கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. சமீபத்தில் சேலம் ரயில்வே கோட்டம் இதற்கென அனுப்பிய முன்மொழிவுகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று அறிகிறேன். போத்தனூர் ரயில் நிலையத்தில் புதிய ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் 3 பிட் லைன்கள் மற்றும் 4 ஸ்டேபிலிங் லைன்களுடன் அமைத்திட தென்னக இரயில்வே பொதுமேலாளர் ஒப்புதலுடன், ரயில்வே வாரியத்தின் நிர்வாக இயக்குநர் (பணிகள்) அவர்களுக்கு அனுப்பப்பட்ட முன்மொழிவு இன்னும் நிலுவையில் உள்ளது.

ரயில் பெட்டிகள் நிறுத்திமிடம் மற்றும் பராமரிப்பு மையம் புதிதாக அமைத்திடாமல், கோவையில் இருந்து புதிய ரயில்கள் சாத்தியம் இல்லை என்ற சூழல் உள்ளது. எனவே , கொடுக்கப்பட்ட முன்மொழிவுகள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்திட வேண்டுகிறேன். அது நடைமுறைப்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தெரிவிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...