சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசம் - கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

12 ஆம் வகுப்பு முடித்த மற்றும் நடப்பாண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்படும் என கோவை ஆட்சியர் அறிவித்துள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பிரிவை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common Law Admission Test) இலவசமாக வழங்கப்படடுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இப்பயிற்சியினை பெற 15 முதல் 25 வயது நிரம்பிய பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த மாணாக்கர்கள் மற்றும் நடப்பாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களும் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம் 3 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை இணையதளம் வழியாகவும் தேர்வு நடைபெறும் முறை நேரிடையாகவும் நடைபெறும். இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணாக்கர்களுக்கும் சட்டப்படிப்பு படிப்பதற்கு ஏனைய நுழைவுத் தேர்வுகளுக்கும் பயிற்சிகள் வழங்கப்படும். பொது நுழைவுத் தேர்வுக்கான சட்டப்படிப்பு நுழைவு தேர்விற்கான பயிற்சி (Common Law Admission Test) வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நேர்வுகளான, நேர்காணல்(Interview), குழு விவாதம், எழுத்துத் தேர்வு ஆகியவற்றிற்கும் பயிற்சிகள் வழங்கப்படும். இந்த தேர்விற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் பயிற்சி www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோவால் வழங்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...