தென்னை விவசாயிகளிடம் இருந்து மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்யப்படும்

தென்னை விவசாயிகள் பயன்பெறும் வகையில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

இது குறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,2023 ஆம் ஆண்டிற்கு விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த இலக்கான 22000 மெ.டன் பூர்த்தி அடைந்த நிலையில் தற்போது விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களின் தொடர் கோரிக்கையின் அடிப்படையில் அரசால் கொப்பரை கொள்முதல் இலக்கு அதிகரித்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி (1500 மெ.டன்) ஆனைமனை (1200 மெ.டன்), செஞ்சேரி மலையடிப்பாளையம்) (1000 மெ.டன்), காரமடை (1000 மெ.டன்), சூலூர் (1000 மெ.டன்), கிணத்துக்கடவு (900 மெ.டன்) அன்னூர் (800 மெ.டன்), நெகமம் (800 மெ.டன்), தொண்டாமுத்தூர் (700 மெ.டன்) மற்றும் கோயம்புத்தூர் (500 மெ.டன்) ஆகிய 10 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் மூலமாக கூடுதலாக 9400 மெ.டன் அரவை கொப்பரை கிலோ ரூ.108.60. க்கும் மற்றும் 400 மெ.டன் பந்து கொப்பரை கிலோ ரூ.117.50-க்கும் 25.11.2023 வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது.

மத்திய அரசு கடிதத்தின்படி ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து மட்டும் கொப்பரை கொள்முதல் செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஏற்கனவே ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் பதிவு செய்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட தென்னை விவசாயிகள் இக்கால நீட்டிப்பினை பயன்படுத்தி பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...