இலவச வீட்டு மனைப்பட்டா வேண்டும் - வாயில் கருப்பு துணி கட்டி கோவை ஆட்சியரிடம் மனு

வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை தடாக ரோட்டில் உள்ள KNG புதூர், சின்ன தடாகம், வேலாண்டிபாளையம், துடியலூர், பன்னிமடை, கணுவாய், ஆனைகட்டி போன்ற பகுதியை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.



கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்திற்கு வாயில் கருப்பு துணி கட்டிக்கொண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



வழக்கறிஞர் புஷ்பானந்தம் தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுத்தனர். ஆனால் வெறும் 10 பேருக்கு மட்டும் பட்டா கொடுக்கப்பட்டது.



விண்ணப்பம் செய்த பலருக்கு இன்று வரை பட்டா வழங்கவில்லை என்றும், பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. கோவை வடக்கு வட்டம் வீரபாண்டி கிராமத்தில் புறம்போக்கு இடங்கள் உள்ளது. அதேபோல் கோவை தடாக ரோட்டில் உள்ள KNG புதூர், சின்ன தடாகம், வேலாண்டிபாளையம், துடியலூர், பன்னிமடை, கணுவாய், ஆனைகட்டி போன்ற பகுதியை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு விண்ணப்பம் அளித்து இருந்தோம் பல பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...