கோவை - மேட்டுப்பாளையம் ரயில் சேவை பிப்.8 மற்றும் பிப்.10 ஆகிய தேதிகளில் ரத்து- சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு

பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பபில், வடகோவை ரயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுவதால் கோவை-மேட்டுப்பாளையம் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் சார்பில் இன்று (பிப்.7) தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பொறியியல் பராமரிப்புப் பணி காரணமாக பிப்ரவரி 8 மற்றும் 10 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 9.35 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்: 06812) மற்றும் காலை 11.50 மணிக்கு புறப்படும் கோவை - மேட்டுப்பாளையம் ரயில் (எண்:06814) முழுவதுமாக ரத்து செய்யப்படுகின்றன.

இதேபோல மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 10.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06813), நண்ற்பகல் 12.55 மணிக்கு புறப்படும் மேட்டுப்பாளையம் - கோவை ரயில் (எண்:06815) முழுவதும் ரத்து செய்யப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...