கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியினர் தீக்குளிக்க முயற்சி

புலியகுளம் விநாயகர் கோவிலில் கணக்காளராக நான் இருக்கும்போதே, இன்னொரு நபரை செயல் அலுவலர் கனகராஜ் பணிக்கு அமர்த்தி விட்ட காரணத்தினால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முருகேசன் தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் தோறும் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும். தற்போது முருகேசன் என்பவர் தன் மனைவியுடன் கையில் டீசல் கேன் கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு டீசலை மேலே ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி மேலே தண்ணீரை ஊற்றி முருகேசன் மற்றும் அவரது மனைவியை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் முருகேசன் கூறுகையில், கோவை புலியகுளம் விநாயகர் கோவிலில் கணக்காளராக பணிபுரிந்து வருவதாகவும், தான் இருக்கும்போது இன்னொரு நபரை செயல் அலுவலர் கனகராஜ் பணிக்கு அமர்த்தி விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனால் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது என்றும், செயல் அலுவலர் கனகராஜ் தனது பணியை பிடுங்கிவிட்டார் எனவும், கனகராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன்காரணமாக தற்கொலை முயற்சி ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...