கோவையில் பேருந்துகளில் ஏர் ஹாரன் சோதனை தீவிரம் - ஏர் ஹாரன், மியூசிக்கல் ஹாரன் அகற்றம்

காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் ஆணையாளர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு நடத்திய காவல்துறையினர், பேருந்துகளில் இருக்க கூடிய ஏர் ஹாரன், மியூசிக்கல் ஹாரனைகளை அகற்றி, பேருந்துகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தனர்.


கோவை: பேருந்துகளில் ஏர் ஹாரன் எனப்படும் அதிக ஒலி எழுப்பக் கூடிய ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து காவல்துறையினர் சோதனைகள் செய்து பேருந்துகளில் ஏர் ஹாரன் இருந்தால் அவற்றை அகற்றி அப்பேருந்துகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று மே.25 காந்திபுரம் நகர பேருந்து நிலையம் அருகில் கோவை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் ஆணையாளர் ஸ்டாலின் தலைமையில் இது குறித்தான சோதனை நடைபெற்று வருகிறது.



இந்த சோதனையில் பேருந்துகளில் இருக்க கூடிய ஏர் ஹாரன், மியூசிக்கல் ஹாரனைகளை காவல்துறையினர் அகற்றினர்.



மேலும் ஏர் ஹாரன் இருக்கும் பேருந்துகளுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

அதுமட்டுமின்றி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் மது அருந்தி உள்ளார்களா என்பது குறித்தும் நவீன கருவிகள் மூலம் சோதனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஏர் ஹாரனை பேருந்து ஓட்டிக் கொண்டிருக்கும் பொழுது பயன்படுத்தினால் 1500 ரூபாயும், நின்று கொண்டிருக்கின்ற போது பயன்படுத்தினால் 10,000 ரூபாயும் தமிழக அரசால் அபராதமாக விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...