கோவையில் குழந்தை விற்பனை தொடர்பாக ஐந்து பேர் கைது - காவல்துறை விசாரணை

பீகாரில் ஒரு பெண் குழந்தையை விலைக்கு வாங்கி, அந்த குழந்தையை ஜிம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவருக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த தம்பதியினர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.



கோவை: சூலூர் அருகே உள்ள ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவர் விவசாய வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த 17 ஆண்டுகளாக குழந்தைகள் இல்லை. இந்நிலையில் சூலூர் அப்பநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள ஹார்லிக்ஸ் தயாரிக்கும் கம்பெனியின் முன்புறமாக ஹோட்டல் கடை நடத்தி வரும் அஞ்சலி-மகேஷ் குமார் தம்பதியினரிடம் விஜயனுக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

விவசாய வேலை செய்து வரும் விஜயன் தனக்கு குழந்தைகள் இல்லாததை பலரிடமும் சொல்லி வைத்து உள்ளார். அவரிடம் பழகிய அஞ்சலி-மகேஷ் குமார் தம்பதியினர் தங்கள் வசம், பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை உள்ளது, அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் உங்களுடைய பெயருக்கு ஆதார் கார்டுடன் பிறப்புச் சான்றிதழ் உடன் குழந்தையைப் பெற்றுத் தருவதாக கூறி உள்ளனர். 

விஜயன் சம்மதம் தெரிவிக்க, அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயாருக்கு தகவலை சொல்லி உள்ளார். பீகாரில் இருந்த அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேக குமாரி ஆகியோர் கடந்த 20 தினங்களுக்கு முன் பீகாரில் இருந்து பிறந்து 15 நாட்கள் ஆன பெண் குழந்தையை சூலூர் கொண்டு வந்து அஞ்சலி-மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து உள்ளனர். 

அவர்கள் ஏற்கனவே பேசியபடி விவசாயி விஜயன் குடும்பத்தாருக்கு இரண்டரை லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் வாங்கி உள்ள நிலையில், இன்னும் 70 ஆயிரம் ரூபாய் வர வேண்டி உள்ளது. இந்நிலையில் குழந்தை விற்பனை தொடர்பாக சூலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சைல்ட் லைன் அமைப்பிற்கு தகவல் கொடுத்து உள்ளார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சைல்ட் லைன் அமைப்பினர் தீவிரமாக விசாரணை செய்து குழந்தை கடத்தி வந்து விற்பனை செய்ததை உறுதி செய்து உள்ளனர். குழந்தை விற்பனையை உறுதி செய்தவர்கள் வாங்கிய நபர் குறித்து தகவல் தெரியாததால் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தங்கராமன் தலைமையில் மேற்பார்வையில் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சுமதி தலைமையில் தனிப்படை அமைத்து குழந்தை விற்பனை தொடர்பாக விசாரணை செய்து வந்தனர். 

உடனடியாக குழந்தை விற்பனை செய்யப்பட்டது உறுதி செய்தவுடன் ஹோட்டல் கடை நடத்தி வந்த பீகார் தம்பதியினர் அஞ்சலி-மகேஷ் குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் ஒரு பெண் குழந்தை மட்டுமின்றி மேலும் ஒரு ஆண் குழந்தையை ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவருக்கு 5 லட்சம் ரூபாய் விலை பேசி விட்டது தெரியவந்தது. 

உடனடியாக இரண்டு குழந்தைகளையும் மீட்ட போலீசார் அஞ்சலி-மகேஷ் குமார் தம்பதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்ததாக கருமத்தம்பட்டி, சூலூர், சுல்தான்பேட்டை காவல் நிலையங்களில் வழக்கு நிலவியில் உள்ளது. சிறைக்கு அனுப்பிய தம்பதி தொடர்பாக தொடர் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையை வாங்கியதாக ஜிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி விஜயனை கைது செய்தனர். 

அவரிடம் விசாரணை நடத்தியதில் 2 1/2 லட்சம் ரூபாய் பேசி குழந்தையை வாங்கியதை ஒப்புக் கொண்டார். அவரையும் கைது செய்து பின் அஞ்சலி- மகேஷ் குமார் தம்பதியினருக்கு சொந்தமான ஹோட்டல் கடையில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது கிடைத்த தகவலின் பெயரில் அஞ்சலியின் தாயார் பீகாரில் இருந்து குழந்தையை கொண்டு வந்ததை கண்டுபிடித்தனர். உடனடியாக அஞ்சலியின் தாயார் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகா குமாரி ஆகியோரை கோவை வர வழைத்தனர் காவல்துறையினர். 

கோவை வந்த பூனம் தேவி, மேகாவை கைது செய்த போலீசார் அவர்களிடம் துருவித், துருவி விசாரணை நடத்தினர். அதில் பீகார் பகுதியில் உள்ள ஒரு ஏழை தம்பதிக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்து உள்ள நிலையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்து உள்ளது. இதை வளர்க்க முடியாமல் சிரமப்பட்ட அவர்களிடம் 1,500 ரூபாய் கொடுத்து பிள்ளையை தாங்களே வளர்த்திக் கொள்வதாக கூறி எடுத்து வந்து கோவையில் விற்பனை செய்ததை பூனம் தேவி அவரது இளைய மகள் மேகா குமாரி ஒப்புக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்களையும் கைது செய்த தனிப்படை போலீசார் சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

குழந்தை விற்பனை தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...