ஆர்டிஇ மாணவர்களிடம் வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பு - கோவை ஆட்சியரிடம் பெற்றோர்கள் புகார்

கோட்டம்பட்டியில் உள்ள ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் பள்ளியில், ஆர்டிஇ மாணவர்களை ஒரு வகுப்பிலும், இதர மாணவர்களை ஒரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்துவதாக கோவை ஆட்சியரிடம் மாணவர்களின் பெற்றோர்கள் புகார் தெரிவித்தனர்.


கோவை: பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் RTE மாணவர்களிடமும் வலுக்கட்டாயமாக கட்டணம் வசூலிப்பதாகவும், RTE மாணவர்களை தனி வகுப்பறைகளில் வைத்து வகுப்புகளை எடுப்பதாகவும் அப்பள்ளியின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டம்பட்டியில் ஸ்ரீ லதாங்கி வித்யா மந்திர் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் (RTE) கீழ் மாணவர்கள் சிலர் பயின்று வருகின்றனர். இந்நிலையில் அம்மாணவர்கள் ஆய்வக வகுப்புகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டுமென நிர்பந்திப்பதாகவும், கட்டணம் செலுத்தவில்லை என்றால் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என குறுஞ்செய்தி அனுப்புவதாகவும் மாவட்ட நிர்வாகம் இதற்கு ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில் 2022-23 கல்வி ஆண்டில் புத்தக கட்டணம் இல்லாமல் கல்வி கட்டணமாக 11,000 வசூலிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்த கல்வி ஆண்டில் கல்வி கட்டணம் புத்தக கட்டணமாக 26,000 ரூபாய் செலுத்த வேண்டுமென கட்டாயப்படுத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது RTE மாணவர்களை ஒரு வகுப்பிலும் இதர மாணவர்களை ஒரு வகுப்பிலும் அமர வைத்து பாடம் நடத்துவதாக கூறினர். இது போன்று மாணவர்களிடம் ஏற்றதாழ்வு பார்க்கும் அப்பள்ளியின் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டனர். மேலும் DEO அலுவலகத்தை பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டுமெனவும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...