பாரதியார் பல்கலையில் வாசுகி மகளிர் விடுதி துவக்க விழா


பாரதியார் பல்கலைக் கழகம் 1982 ஆம் ஆண்டு ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. தற்பொழுது பாரதியார் பல்கலைக் கழகத்தில் 39 துறைகளும் 2543 மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.



இப்பல்கலைக் கழகத்தில் 9 விடுதிகள் அமைக்கப்பட்டு அதில் 1776 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 23 மாணவர்களும் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 391 மாணவர்களும் இங்கு தங்கி பயன்பெற்று வருகின்றனர்.

மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் ரூசா (RUSA) என்ற திட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுடைய உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டினை மாநில அரசுகள் மூலமாக ஒதுக்கீடு செய்து, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தி வருகிறது.



ரூசா திட்டத்தின் மூலம் பாரதியார் பல்கலைக் கழகம் "உட்கட்டமைப்பு" என்கிற தலைப்பில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான கருத்துருவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சமர்பித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 26.05.2014 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை, பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 

முதல் கட்டமாக ரூ.2.5 கோடியை கட்டுமான நிதியாக வழங்கியுள்ளது. அந்த நிதி மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் நிதி என ரூ.5.50 கோடி மதிப்பிலான பெண்கள் விடுதிக் கட்டிடம் வாசுகி மகளிர் விடுதி என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது. 



இந்த மகளிர் விடுதி 25 ஆயிரம் சதுரடி அளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், மாணவிகளுக்கு 54 அறைகளும் மற்றும் மாணவிகளின் சேவைக்காக இதர 10 அறைகளும் கட்டப்பட்டுள்ளன. 

இந்த விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, இணையதள வசதி, கண்காணிப்பு கேமரா கருவிகள், விளையாட்டுத் திடல் மற்றும் இதர வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 160 மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என பாரதியார் பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...