6 ஆயிரம் அரியவகை ஜெப மாலைகள் கொண்ட 'மாதாவின் மணிகள்' அருங்காட்சியகம்: கோவையின் பெருமை


அனைத்து மத வழிபாடுகளிலும் கடவுளை சார்ந்து வழிபடுவதேற்கென சில ஊடு பொருட்களை உலக மக்கள் அனைவரும் பயன் படுத்தி வருகின்றனர். அமைதியான ஒருமித்த மனோ நிலையை அடைந்து, கடவுளை மட்டும் கருத்தில் நிறுத்தி வழிபடுவதற்காக இவ்வகை ஊடு பொருட்கள் காலங்கலாமாக   பயன்பாட்டில் இருந்து வருகிறது. அந்த வகையில் கிறிஸ்தவ மதத்தில் கடவுளை முழுமையாக தியானித்து வழிபடுவதேற்கான கொண்டுவரப்பட்டது தான் ஜெபமாலை. 



ஜெப மாலைகள்

ஜெப மாலைகளை பயன்படுத்தி இறைவனை வழிபடும் முறையை முதன் முதலாக கி.பி.1090-ம் ஆண்டு பீட்டர் ஹெர்மிட் என்ற துறவி கொண்டுவந்தார். முன்னதாக கற்களை ஒவ்வொன்றாக குவளை ஒன்றினுள் போட்டு ஜபம் மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கிறிஸ்தவ வழிபாட்டு முறைப்படி கடவுளை தியானிப்பது தான் ஜெபம். கடவுளின் பிறப்பு, வாழ்கை முறைகள், அவர் அளித்த நெறிகள் முதலானவற்றை உள்வாங்கி அதையே நினைத்து தியானித்து வருகின்றனர் கிறிஸ்தவர்கள். இந்த தியானங்களும், தியாநிக்கப்பயன்படும் ஜெப மாலைகளிலும் பல்வேறு முறைகள் உள்ளன. அந்த வகையில் உலகம் முழுவதும் சுற்றி மிக பழமையான மற்றும் அறிய வகை ஜெப மாலைகளை சேமித்து வருகிறார் 



கோவை சேர்ந்த சுகந்தி ரோஸ்.  இந்த மங்கையின் இந்த தெய்வீக சேவையை பாராட்டி போப் ஆண்டவர் பிரான்சிஸ் அவருக்கு ஒரு வாழ்த்து மடலை அனுப்பியதோடு ஜெப மாலை ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார்.

கோவை சவுரிபாளையம் பகுதியை சேர்ந்த சுகந்தி ரோஸ் தான் சேகரித்த மொத்த ஜெப மாலைகளையும் கொண்டு மாதாவின் மணிகள்' என்ற அருங்காட்சியகத்தை அவர் வீட்டின் அருகிலேயே தொடங்கியுள்ளார். ரோமபுரி, இஸ்ரேல், எகிப்து மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சேகரித்த அரியவகை ஜெப மாலைகளை பார்வையிட உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் கோவையை நோக்கி வருகின்றனர். 

இந்த அறிய வகை ஜெப மாலைகள் குறித்தும், அதை சேகரிக்கும் தனது தெய்வீக பணிகள் குறித்தும் சுகந்தி ரோஸ் நம்மிடம் கூறியதாவது :-  

முதுகலை பொருளாதாரம் படித்து முடித்த நான் பழங்கால நாணயங்கள் மற்றும் அஞ்சல்தலைகள் சேகரிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தேன். அடிப்படையில் கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டு கடந்த 2000-ம் ஆண்டு முதல் புனித ஜெப மாலைகளை சேகரிக்க தொடங்கினேன். உலகின் பல நாடுகளுக்கும் சென்று திருப்பன்டங்கள் அடங்கிய ஜெப மாலைகள், கடவுளின் அடையாளத்தை தாங்கி நிற்கும் பல பொருட்களை சேமித்தேன். அதில் சிலவற்றை அதிக பணம் செலவழித்து வாங்க வேண்டியிருந்தது. இதற்காக எந்த ஒரு அமைப்பிடம் இருந்தும் நிதி உதவி அல்லது கோடை பெற கூடாது என்று முடிவு  செய்து  குடும்பத்தினரின் உதவியுடனேயே இந்த பணிகளை செய்தேன். பொருளாதார நெருக்கடிகள் ஏற்படும்போது கடவுள் அனுகிரகத்தால் அத்தனை தடைகளையும் முறியடித்து கடந்த 2014-ம் ஆண்டு 'மாதாவின் மணிகள் என்ற இந்த அருங்காட்சியகத்தை தொடங்கினேன்.   

கோவை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் இந்த அருங்காட்சியகத்தை திறந்து வைத்து ஒரு அங்கீகாரத்தை எனக்களித்தார். மேலும்,  போப் ஆண்டவர் பிரான்சிஸ் எனதை சேவையை பாராட்டி வாழ்த்து மடல் ஒன்றையும் ஜெப மாலையையும் அனுப்பி வைத்தார். தற்போது அருங்காட்சியகத்தில் உள்ள அரியவகை ஜெப மாலைகளை வழிபட ஆஸ்திரேலியா, இலங்கை, அமெரிக்க உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகின்றனர். இது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. அருங்காட்சியகத்தை பாரவையிடவும், ஜெபம் மேற்கொள்ளவும் இலவச அனுமதி வழங்கப்படுகிறது. 



அரியவகை ஜெபமாலை 

2-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரோமாபுரியில் இருந்த ராஜா வம்சத்தினர், கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை துன்புறுத்தி கொலை செய்தனர். அவ்வாறு மரணித்தவர்களின் காலடி மண் கூட புனிதமாக கருதப்படுகிறது. அப்படி இறந்தவர்களின் எலும்புத்து துகள்களை கொண்டு ஒரு ஜெபமாலை தாரிக்கப்பட்டது. அதை 'கேடகோம்ப்' (CATACOMB ) என்று அழைப்பர். அந்த புனித ஜெபமாலை தற்போது 'மாதாவின் மணிகள்' அருங்காட்சியகத்தில் உள்ளது. ஜெபம் பல்வேறு வகைகளாக உள்ளது. 

ஒருவருக்கு தேவையான அல்லது வேண்டிய பொருளை பெற அல்லது நோய்கள் குணமடைய என ஒவ்வொரு ஜெபத்திற்கும் ஏற்ப பலவிதமான ஜெப மாலைகள் மற்றும் ஜெப மணிகள் உள்ளன. அவ்வகையில் சுமார் 6 ஆயிரம் அரியவகை ஜெப மாலைகளை சேகரித்துள்ளேன். பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இந்த அரியவகை ஜெப மாலைகள் குறித்து கேட்டு அறிந்திருப்பார்கள். ஆனால், பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.



அபூர்வ கல் 

எகிப்து நாட்டில் உள்ள சீனார் மலைப்பகுதியில் முட்புதர் வடிவில் மக்களுக்கு பிதா காட்சியளித்துள்ளார். இப்போதும் அந்த மலையில் இருந்து ஒரு சிறு பாறையை உடைத்தால் கூட அதில் முட்புதர் வடிவிலான அட்சுகள் இருக்கும். எகிப்து நாடு அந்த மலையை பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறது. அந்த மலையில் இருந்த கிடைத்த திருப்பண்டம் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளது. 

இது போன்ற திருப்பண்டங்களையும், புனித ஜெப மாலைகளையும் அனைத்து தரப்பு மக்களும் வழிபட வேண்டும் என்ற ஒரே நோக்கில் தான் அருங்காட்சியகத்தை தொடங்கினேன். தினமும் காலை 10 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த அருங்காட்சியகம் செயல்படுகிறது. 

இவ்வாறு  சுகந்தி ரோஸ் கூறினார். 

'மாதாவின் மணிகள்' அருங்காட்சியகத்தை பார்வையிட '9894630876' இந்த எண்ணை அழைக்கலாம்.  

Newsletter

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...