கோவை மேயர் மீதான ஊழல் குற்றச்சாட்டு தவறு - அமைச்சர் முத்துசாமி விளக்கம்

கோவையில் அமைச்சர் முத்துசாமி புதிய நுழைவாயிலை திறந்து வைத்தார். சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வைப்பு நிதி பத்திரங்களை வழங்கினார். பின்னர் பல்வேறு விவகாரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவாயிலை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1048 பயனாளிகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வைப்பு நிதி பத்திரத்தை வழங்கினார்.

செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2.49 கோடி மதிப்பில் 5 கட்டிடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், இரண்டு பெண் குழந்தைகள் உள்ள குடும்பத்திற்கு தலா 25 ஆயிரம் வைப்பு நிதி வைக்கும் திட்டத்தின் கீழ் 5.11 கோடி மதிப்பில் 1048 பயனாளர்களுக்கு பத்திரங்கள் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.



மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் இன்று முதல் 66 நாட்களுக்கு முகாம்கள் நடைபெற உள்ளதாகவும், கோவை மாவட்டத்தில் 218 கிராம பஞ்சாயத்துக்களில் இம்முகாம்கள் நடத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். 15 துறைகள் இதில் பங்கேற்கும் எனவும், 44 விதமான பிரச்சனைகளுக்கு மனு அளிக்கலாம் எனவும், 30 நாட்களுக்குள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

அவிநாசி மேம்பால பணிகளும், சர்வதேச கிரிக்கெட் மைதான பணிகளும் விரைவுப்படுத்தப்படும் என தெரிவித்தார். டெட்ரா பாட்டில் குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தில் இது சம்பந்தமான வழக்கு இருப்பதாகவும், அதை எல்லாம் பார்த்த பின்பு தான் நடவடிக்கைகள் கொடுக்க வேண்டும் என பதிலளித்தார்.



கள்ளு கடை திறப்பது குறித்து, அது மிகப்பெரிய கொள்கை முடிவு எனவும், அது குறித்து பல்வேறு ஆலோசனைகள் செய்யப்பட வேண்டி இருப்பதாகவும் தெரிவித்தார். கோவை மேயராக இருந்த கல்பனா உடல்நிலை சரியில்லை என்று தான் ராஜினாமா கடிதத்தை வழங்கி இருப்பதாகவும், அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு என்று கூறுவது சரியானது அல்ல என தெரிவித்தார்.

அரசு மதுபான கடைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்பொழுது 500 கடைகள் மூடப்பட்டு இருப்பதாகவும், அதனை தொடர்ந்து செய்வதற்கு சில இடையூறுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். அனுமதி இன்றி மதுக்கடைகளை நடத்தினால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

டாஸ்மாக்கில் பில்லிங் சிஸ்டம் ஒழுங்காக நடைபெறும் என தெரிவித்தார். மதுபான கடைகளில் கூடுதல் விலைக்கு மதுவை விற்பனை செய்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் சில இடங்களில் மாசு கலந்த குடிநீர் வருவதாக புகார்கள் வருவது குறித்து, அது குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

விக்கிரவாண்டி தேர்தலை பொறுத்தவரை, பொதுமக்கள் திமுக பக்கமும் முதலமைச்சர் பக்கமும் முழுமையாக நிற்பதை நேரடியாக பார்க்க முடிவதாகவும், மாபெரும் வெற்றியை பொதுமக்கள் அளிப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...