கோவை வீட்டை விட்டு வெளியேற நிர்பந்தம் - நரிக்குறவர் குடும்பம் தீக்குளிக்க முயற்சி

கோவையில் வீட்டை விட்டு வெளியேறுமாறு நிர்பந்திக்கப்பட்டதாக கூறும் நரிக்குறவர் குடும்பம் ஒன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றது. போலீசார் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி குள்ளக்காபாளையத்தைச் சேர்ந்த சுஜாதா என்ற நரிக்குறவர் பெண்ணின் தங்கை, வேறு இனத்தைச் சேர்ந்த விஜில்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், விஜில்குமார் சுஜாதா மற்றும் அவரது குடும்பத்தினரை அவர்களுக்கு சொந்தமான வீட்டில் வசிக்க விடாமல், வெளியேறுமாறு நிர்பந்தித்துள்ளார்.

இதனால் வீட்டை விட்டு வெளியேறிய சுஜாதா தனது குடும்பத்தினருடன் பேருந்து நிலையத்தில் தங்கி வந்துள்ளார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.



இன்று, தங்கள் வீட்டிற்கு சொந்தமான உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த சுஜாதாவும் அவரது குடும்பத்தினரும், தங்கள் வீட்டை மீட்டுத் தரக்கோரி, மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி அசம்பாவிதத்தை தடுத்து நிறுத்தினர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...