கோவை மேட்டுப்பாளையம் அருகே மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க தீவிர வாகன சோதனை

கோவை மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள எல்லையோர வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்துகின்றனர். சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே கேரள மாநில எல்லையான முள்ளி வனப்பகுதியில் காவல்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மாவோயிஸ்ட்கள் பதுங்கியுள்ளனரா மற்றும் நடமாட்டம் உள்ளதா என தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். முள்ளி வழியே உள்ளூர் பழங்குடியின மக்களை தவிர பிறர் கேரளாவிற்குள் நுழையவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை, மேட்டுப்பாளையத்தில் இருந்து பில்லூர் அணை செல்லும் மலைப்பாதையில் கேரள எல்லையோரம் முள்ளி வனப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏற்கனவே வனத்துறை சோதனை சாவடி உள்ளது. இச்சோதனை சாவடியை கடந்து பில்லூர் அணைப்பகுதி மற்றும் கேரள பகுதிகள் செல்லும் வாகனங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதை தடுப்பு சுவர்களில் எழுதப்பட்டிருந்த தேச விரோத கருத்துக்கள் மற்றும் தமிழக எல்லையோரம் உள்ள கேரள வனப்பகுதி மலைக்கிராமங்களில் ஒட்டப்பட்டிருந்த தேர்தல் புறக்கணிப்பு போஸ்டர்கள் உள்ளிட்ட சம்பவங்களில் மாவோயிஸ்ட்கள் தொடர்பு இருக்கலாம் என நக்சல் தடுப்பு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், முள்ளி சோதனை சாவடியில் வாகன சோதனை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. முள்ளி வழியே சுமார் முந்நூறு மீட்டர் தொலைவு மட்டுமே உள்ள கேரள பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மற்றும் உள்ளூர் மக்கள் மட்டுமே தகுந்த ஆவணங்களை காட்டி கடந்து செல்ல முடியும்.

மேலும் இவ்வழியே பில்லூர் அணை பகுதிக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்பட்டு வருகிறது. தமிழக மற்றும் கேரள அரசால் தேடப்பட்டு வரும் மாவோயிஸ்ட்களின் புகைப்படங்கள் அடங்கிய போஸ்டர்கள் முள்ளி சோதனை சாவடி பகுதியில் ஒட்டப்பட்டு தற்போது கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...