நீள்கிறது காந்திபுரம் பாலம் கட்டும் பணி : விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


காந்திபுரம் பகுதியில் இரண்டு அடுக்கு மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. சுமார், ரூ.162 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் இந்த பாலம் நஞ்சப்பா சாலையையும், சத்தி சாலையையும் இணைக்கும் விதமாக 1752 மீ நீளம் மற்றும் 26 மீ அகலத்தில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக 55 தூண்கள் அமைக்கப்பட்டன. அதில், 53 தூண்களின் மீது காண்கிரீட் பாலம் அமைக்கப்பட்டது. மேலும், 2 தூண்கள்  ஜி.பி. சிக்னல் பகுதியில் உள்ளன. இப்பகுதியில் இரண்டடுக்கு ரவுண்டான பாலம் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் காரணமாக காந்திபுரத்தில் இருந்து சரவணம்பட்டி நோக்கி செல்லும் வாகனங்கள் கிராஸ்கட் ரோடு வழியாக சென்று 100 அடி சாலையை அடைந்து மீண்டும் சத்தி சாலையை அடைகின்றன.

கடந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மேம்பால பணிகள் முடிவடையும் என்று கூறப்பட்டது. ஆனால், சட்டமன்ற தேர்தல் காரணங்களால் தற்காலிகமாக இந்த பணி நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கப்பட்டது. மெத்தனமாக நடைபெறும் இந்த பணிகள் இன்னும் முடிந்தபாடில்லை. தற்போது இப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

மின் கேபிள் பதிக்கும் பணி

100 அடி சாலை பகுதியில் உள்ள உயர் கோபுரங்கள் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்பட்டு வந்தது. இந்த கோபுரங்களால் இரண்டடுக்கு பாலம் கட்ட பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டன. இதனால், உயர் மின் அழுத்த கேபிள்களை நிலத்தடியில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக ரூ.13 கோடி செலவில் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் வாங்கப்பட்டன. தொடர்ந்து அவை நிலத்தடியில் பதிக்கப்பட்டன.

அடிக்கடி விபத்து

மேம்பால பணிகளால் ஜி.பி. சிக்னல் பகுதியில் உள்ள சிக்னல்கள் மற்றும் சாலை விளக்குகள் அகற்றப்பட்டுள்ளது.  சாலை விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பதட்டத்துடன் வகானத்தை இயக்குகின்றனர். அதனால், அவ்வப்போது சிறு சிறு விபத்துகளும் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இந்த விபத்துக்களால் இதுவரை உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. இருந்த போதும் பெரிய அளவில் சேதம் ஏற்படும் முன் நடவடிக்கை எடுப்பதுவும்,பணிகளை விரைந்து முடிப்பதும் மிக அவசியம் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...