இன்று உலக புவி தினத்தை முன்னிட்டு கோவையில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி

உலகம் முழுவதும் ஏப்ரல் 22ம் தேதியன்று (இன்று) உலக புவி தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலக புவி தினத்தை முன்னிட்டு புவியின் மகிமையினை போற்றும் வகையில் உலகம் முழுவதும் 500 இடங்களில் "மார்ச் ஃபார் சையின்ஸ்" பேரணி நடைபெற்றது. இதில் ஆசியக் கண்டத்தில் 3 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் கோவையிலேயே மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி நடைபெற்றது.



கோவை மாவட்டம், ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இப்பேரணியினை ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் மற்றும் ராக் அமைப்பு இணைந்து நடத்தியது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பங்கேற்று பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்தார். 

இதுகுறித்து இந்நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஸ்கூல் ஆஃப் சையின்ஸ் சாரதா கூறுகையில், விஞ்ஞானம் மூலமாகவே இவ்வுலகில் பல செயல்கள் நடைபெற்று வருகிறது. மக்கள் மத்தியில் விஞ்ஞானம் குறித்து பல்வேறு மன நிலைகள் உள்ளது. இதில் தவறான மனநிலைகளை உடனடியாக தவிர்க்க வேண்டும். வரும் காலங்களில் நடக்கவுள்ள தீமைகளை தடுத்து உலகை காக்கும் சக்தி அறிவியல் விஞ்ஞானத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை அனைவரும் ஏற்க வேண்டும்" என்றார்.



இதனைத்தொடர்ந்து, கோவை மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சரவணன் பேசுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணி குறித்து பள்ளி மாணவ, மாணவியர்கள் என்னைச் சந்தித்து அனுமதி கோரினர். அவர்கள் எனக்கு இதுகுறித்தான முழுத் தகவலையும் தெரிவித்தனர். 



விளையாட்டு, தொலைக்காட்சி, பொழுதுபோக்கு என்று மாணவர்கள் தங்களது சுயநலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இச்சமுதாயத்தில் இந்த மாணவர்கள் சமூகநல அக்கறையுடன் என்னைச் சந்தித்தது மகிழ்ச்சியளித்தது. அதனாலேயே உடனடியாக அனுமதியளித்தேன். 



இன்று மட்டும் இன்றி ஒவ்வொரு நாளும் நாம் புவி தினத்தை கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த உலகை அழகான முறையில் விட்டுச் செல்ல வேண்டும். இவ்வுலகில் பல்வேறு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வருகின்றன. அவற்றை ஆக்கப்பூர்வமாகவும், அழிவுப்பூர்வமாகவும் பயன்படுத்துவது நம் கையில் தான் உள்ளது" என்றார்.

இதைத்தொடர்ந்து நடைபெற்ற மார்ச் ஃபார் சையின்ஸ் பேரணியில் கல்லூரி முதல் சிறுவயதுடைய ஆரம்பப் பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்று புவியினை போற்றும் வகையில் பதாகைகளை ஏந்தியவாறு பேரணி சென்றனர். 

ரேஸ்கோர்ஸ் பகுதியில் துவங்கிய இப்பேரணி ரேஸ்கோர்ஸ் பகுதிக்குட்பட்ட அனைத்து வீதிகளின் வழியாகச் சென்று நிறைவடைந்தது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...