அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க இட ஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மேற்படிப்பு படிக்க வழங்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதைக் கண்டித்தும், மீண்டும் இடஒதுக்கீட்டினை வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் ஊர்வலமாக வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பு படிக்க மருத்துவக் கல்லூரிகளில் 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 25 வருடங்களாக இருந்து வந்த இந்த ஒதுக்கீட்டை உயர்நீதிமன்ற உத்திரவு படி தமிழக அரசு ரத்து செய்துள்ளது.

அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பிற்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு எதி்ர்ப்பு தெரிவித்தும் மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் மாநிலம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் இன்று மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள, பேராசிரியர்கள் ஆகியோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் அரசு மருத்துவமனையில் இருந்து மருத்துவர்களும், மருத்துவ மாணவர்களும் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை முழக்கங்களை எழுப்பிய படி வந்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க மாநில துணைத் தலைவர் ரவிசங்கர் கூறுகையில், நீதிமன்றம் மூலமாகவோ, அவசர சட்டம் மூலமாகவோ மீண்டும் இட ஒதுக்கீட்டை பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்த உள்ளோம்' என தெரிவித்தார்.

முன்னதாக கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தியதால் வெளிநோயாளிகளாக சிகிச்சை எடுக்க வந்த பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...