கோவை கலெக்டர் அலுவலக நுழைவாயிலில் விசிக செயலாளருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின் போது, விசிக மண்டல செயலாளர் சுசி கலையரசனின் கார் நுழைவிற்கு போலீசார் தடை விதித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.



Coimbatore: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனுக்களை அளித்தனர். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் பொதுமக்களை சோதனை செய்த பின்னரே மனு அளிக்க உள்ளே அனுமதி அளித்து வந்தனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் சுசி கலையரசன் தனது காரில் மனு அளிக்க வந்தார். கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் அருகே போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி, காரை உள்ளே அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.



இதனால் ஆத்திரமடைந்த சுசி கலையரசன், கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், போலீசார் அவரது வாகனத்தை உள்ளே செல்ல அனுமதித்தனர். இச்சம்பவம் காரணமாக கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...