கோவையில் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: காதல் விவகாரம் காரணமா?

கோவையில் தனியார் கல்லூரியில் பி.இ படித்து வந்த 23 வயது மாணவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி துடியலூர் ரோட்டை சேர்ந்த 23 வயது கல்லூரி மாணவர் இந்திரஜித் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திரஜித்தின் தாயார் பபிதா (42) ஐடி ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக அவர் தனது கணவரிடமிருந்து பிரிந்து வாழ்ந்து வந்தார். இந்திரஜித் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.இ நான்காம் ஆண்டு படித்து வந்தார்.

சமீப காலமாக இந்திரஜித் கோத்தகிரியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி வந்ததாக தெரிகிறது. இதனை அறிந்த அவரது தாயார் பபிதா அதனை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த இந்திரஜித், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு கத்தியால் தனது கையில் வெட்டிக்கொண்டு தாயாரை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கடும் மன உளைச்சலில் இருந்த இந்திரஜித், நேற்று (செப்டம்பர் 7) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சம்பவம் குறித்த தகவல் அறிந்து வந்த போலீசார், இந்திரஜித்தின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக சரவணம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திரஜித்தின் தற்கொலைக்கு காதல் விவகாரம் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...