கோவை மாநகராட்சி பொறியாளரிடம் ரூ.1.02 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை

கோவை மாநகராட்சி இளநிலைப் பொறியாளர் விமல்ராஜிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர். ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் பணம் வசூலித்ததாக புகார் எழுந்தது.



கோவை: கோவை மாநகராட்சி மத்திய மண்டல பொறியியல் பிரிவில் இளநிலைப் பொறியாளராக பணியாற்றி வரும் விமல்ராஜ் (42) என்பவரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல் செய்தனர்.

விமல்ராஜ் வஉசி பூங்கா உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் பணிகளை மேற்பார்வையிடும் பொறுப்பில் இருந்தார். அவருக்கு வஉசி பூங்கா அலுவலக வளாகத்தில் நிர்வாக அலுவலகம் அமைந்துள்ளது.

அலுவலகத்திற்கு வரும் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பொதுமக்களிடம் விமல்ராஜ் பணம் வசூலிப்பதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு கூடுதல் துணை கண்காணிப்பாளர் திவ்யா தலைமையில் ஆய்வாளர் எழிலரசி மற்றும் போலீசார் குழு அமைக்கப்பட்டது.

செப்டம்பர் 10 ஆம் தேதி, இந்தக் குழுவினர் விமல்ராஜின் அலுவலகத்தில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, விமல்ராஜின் மடிக்கணினி பையில் சோதனையிட்டபோது கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத் துறையினர் உடனடியாக அந்தப் பணத்தைப் பறிமுதல் செய்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவை மாநகராட்சி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

தேக்கம்பட்டியில் மீண்டும் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம்: முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்

தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் மீண்டும் நடைபெறவுள்ள கோயில் யானைகள் புத்துணர்வு முகாமை முன்னிட்டு, இந்து சமய அறநிலையத்த...

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு முதியவர் தர்ணா; அரசு மருத்துவமனை குறித்து புகார்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தின்போது, அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்கப்படவ...

ஜூன் இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு சாய்பாபா காலனி மேம்பாலம் திறக்கப்படும்: அமைச்சர் சம்பத்குமார்

கோவையில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை அமைச்சர் வி. சம்பத்குமார் ஆய்வு செ...

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தல்..? 50 மூட்டைகளுடன் சிக்கிய மினி லாரி.

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை அருகே ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக கிடைத்த தகவலின் பேரில் மினி லாரி ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்ட...

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...