கோவை சிங்காநல்லூர் பேருந்தில் முதியவரிடம் ரூ.1 லட்சம் திருட்டு: போலீசார் விசாரணை

கோவை சிங்காநல்லூர் பேருந்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது. கூட்ட நெரிசலில் மர்ம நபர் பிளேடால் பாக்கெட்டை கிழித்து பணத்தை திருடியுள்ளார்.


கோவை: கோவை சிங்காநல்லூர் பகுதியில் பேருந்தில் பயணம் செய்த முதியவரிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருமலைசாமி (65) என்பவர் நேற்று (செப்டம்பர் 22) கோவை அருகே உள்ள நீலாம்பூரில் வசித்து வரும் தனது அண்ணன் மகள் அனுராதா வீட்டுக்கு வந்தார். அங்கு அனுராதாவின் கணவரிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றுக்கொண்டார். அந்தப் பணத்தை தனது டவுசர் பாக்கெட்டில் வைத்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பச் செல்ல புறப்பட்டார்.

திருமலைசாமி ஹோப் காலேஜ் பேருந்து நிறுத்தம் சென்று, அங்கிருந்து தனியார் பேருந்தில் சிங்காநல்லூர் நோக்கி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை பயன்படுத்தி, ஒரு மர்ம நபர் பிளேடால் திருமலைசாமியின் டவுசர் பாக்கெட்டை கிழித்து ரூ.1 லட்சத்தை திருடிச் சென்றுள்ளார்.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த திருமலைசாமி, உடனடியாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, பணத்தை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்துகளில் பயணம் செய்யும்போது தங்கள் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், இது போன்ற சம்பவங்களைத் தடுக்க பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராக்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...