பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை கோரி கோவையில் ஆர்ப்பாட்டம்

கோவையில் பிராமணர்களை அவமதிப்போர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிராமண சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


Coimbatore: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் பிராமணர்களுக்கு எதிராக தவறான கருத்துக்களை பதிவிடுவோர் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் உட்பட பல்வேறு பிராமண சங்கங்கள் மற்றும் இயக்கங்களை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிராமணர்களுக்கு எதிராக நூலிபான், Crossbelt, மாமி போன்ற சொற்களை பயன்படுத்தி கொச்சைப்படுத்துவோர் மீது PCR சட்டம் பாய வேண்டும் என்று வலியுறுத்தினர்.



ஆர்ப்பாட்டத்தின்போது பிராமணர்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டித்தும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

பிராமண சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் பாலசுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாட்டில் பிராமணர்களை காக்க சிறப்பு PCR சட்டம் இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, கோவை மாவட்ட ஆட்சியர் மூலம் தமிழக முதலமைச்சருக்கு அனுப்பும் கோரிக்கை போராட்டத்தை இன்று துவக்கி இருக்கிறோம்" என்றார்.



மேலும், "பிராமணர்களை யாராவது மட்டமாக பேசினால், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உடனடியாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறோம்" என்றும் அவர் கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...