கோவையில் ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மனுக்கு கத்தி போடும் திருவிழா கோலாகலம்

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலில் விஜயதசமி நாளில் கத்தி போடும் திருவிழா நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு வேசுக்கோ, தீசுக்கோ கோஷங்கள் எழுப்பினர்.



கோவை: கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் விஜயதசமி நாளில் நடைபெறும் கத்தி போடும் திருவிழா இந்த ஆண்டும் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த ஆண்டு, கோவை சாய் பாபா காலணியில் உள்ள விநாயகர் கோவிலில் காலை கத்தி போடும் திருவிழா ஊர்வலம் தொடங்கியது.



இதில் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வேசுக்கோ, தீசுக்கோ என்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஊர்வலம் சுமார் 400 ஆண்டுகளாக பாரம்பரியமாக கொண்டாடப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.



ஊர்வலத்தில் கலந்து கொண்ட பக்தர்கள் வேசுக்கோ, தீசுக்கோ என்று பாடிக் கொண்டும், ஆடிக்கொண்டும் கத்தியால் கைகளில் வெட்டிக் கொண்டே அம்மனை அழைத்தனர்.



பக்தர்களின் உடலில் ரத்தம் வழிந்து ஓடியது.



வெட்டுக் காயங்களின் மீது திருமஞ்சனப் பொடியை வைத்துக் கொண்டு, ஆடிக்கொண்டே சென்றனர். இந்த திருமஞ்சன பொடியை வைத்தால் 3 நாட்களில் காயம் சரியாகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.



ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக டவுன்ஹாலில் உள்ள ஶ்ரீ ராமலிங்க சௌவுடாம்பிகை அம்மன் கோவிலை வந்தடைந்தது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கத்தி போடும் திருவிழாவை பார்த்து பரவசம் அடைந்தனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...