முரசொலி செல்வம் மறைவு: பல்சமய நல்லுறவு இயக்கம் இரங்கல்

முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம் மறைவுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவர் ஹாஜி. ஜெ. முகமது ரஃபி இரங்கல் தெரிவித்துள்ளார். சமூக நீதிக்கான குரலாக விளங்கிய முரசொலி செல்வத்தின் சேவைகளை அவர் பாராட்டியுள்ளார்.


தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய உறுப்பினரும், பல்சமய நல்லுறவு இயக்கத் தலைவருமான ஹாஜி. ஜெ. முகமது ரஃபி, முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சமூக நீதியின் குரலாக, சமூக நீதிக்கான குரலாக ஒலித்த முரசொலி செல்வம் அவர்களின் புகழ் எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும். மண்ணில் மறைந்தாலும் மனதில் நிரந்தரமாக வாழும் ஐயா முரசொலி செல்வம் அவர்களுக்கு புகழ் அஞ்சலி" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், திராவிட இயக்கங்களின் பங்களிப்பை பாராட்டிய அவர், "மனித சமுதாயத்தில் ஏற்ற தாழ்வுகள் நீங்க, சமத்துவம் தழைத்தோங்க களமாடியது திராவிட இயக்கங்கள். திராவிட இயக்கங்களின் சமூக செயல்பாடுகளையும், சமூக அவலங்களை அடியோடு ஒழிக்க ஓயாது ஒலிப்பது முரசொலி நாளிதழ்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முரசொலி செல்வத்தின் பங்களிப்பை விவரித்த அவர், "சமூக நீதி பத்திரிகையாளராக, திராவிட இயக்க எழுத்தாளராக திராவிட முன்னேற்றக் கழகம் கண்ட மகத்தான ஆளுமையாக விளங்கினார். மொழிப்போரில் முன் நின்ற, முன்னாள் சட்டக் கல்லூரி மாணவர் அமைப்பின் தலை சிறந்தவர்களில் ஒருவரான முரசொலி ஆசிரியர் முரசொலி செல்வம், 'சர்க்காரியா கமிஷன் - ஒரு சூழ்ச்சி வலை', 'சில நினைவலைகள்' போன்ற நூல்களை எழுதி உண்மையை வெளிச்சம் போட்டு காட்டியவர்" என்று பாராட்டியுள்ளார்.

இறுதியாக, "மீளா துரயரில் ஆழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் குடும்பத்தாருக்கும், முரசொலி குழுமத்துக்கும், திராவிட இயக்கங்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், உலக தமிழ் நெஞ்சங்களுக்கும் பல்சமய நல்லுறவு இயக்கம் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து, கண்ணீருடன் புகழ் அஞ்சலியை காணிக்கையாக்க விளைகின்றோம்" என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...