கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்றும் மும்பைக்கு 4 விமானங்கள் இயங்குகின்றன. சர்வதேச இணைப்புகள், வசதியான இருக்கைகள் மற்றும் சூடான உணவு வசதிகளை காரணம் காட்டி சென்னை, பூனே உள்ளிட்ட நகரங்களுக்கு சேவைகள் தொடங்க வேண்டும் என்று தொழில்துறையினர் கோருகின்றனர்.


Coimbatore: கோவை சர்வதேச விமான நிலையத்தில் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளை அதிகரிக்க வேண்டும் என்று தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள், வசதியான இருக்கைகள், சூடான உணவு வகைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏர் இந்தியா வழங்குவதால் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.



கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பின் இயக்குனர் சதீஷ் இதுகுறித்து கூறும்போது, "ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் நிர்வகிக்க தொடங்கிய நாள் முதல் அந்நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுகிறது" என்றார். கோவை சர்வதேச விமான நிலையத்தில் தற்போது ஏர் இந்தியா சார்பில் டெல்லி மற்றும் மும்பை நகரங்களுக்கு 4 விமானங்கள் இயக்கப்படுகின்றன.






மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா வாங்கிய பிறகு அந்த நிறுவனத்தின் சேவைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக சதீஷ் தெரிவித்தார். குறிப்பாக பெரும்பாலும் குறித்த நேரத்தில் விமானங்கள் இயக்கப்படுவது, தூய்மை, சூடான பலவகை உணவுகள் பரிமாறப்படுவது, மிகவும் வசதியான இருக்கைகள், பல்வேறு நாடுகளுக்கு இணைப்பு விமான சேவைகள் வழங்கப்படுவது உள்ளிட்டவை ஏர் இந்தியா நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களாக உள்ளன என்று அவர் விளக்கினார்.




ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு சர்வதேச விமான நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கொண்டுள்ளதால் உதாரணமாக கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றால் அங்கிருந்து அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு இணைப்பு விமான சேவையை பெற முடியும். ஒருமுறை கோவையில் பயணிகள் தங்களது உடைமைகளை செக்இன் செய்தால் போதும், டெல்லி சென்று மீண்டும் அங்கிருந்து எந்த வெளிநாட்டுக்கு செல்கிறாரோ அந்த விமான நிலையத்தில் சென்று தனது உடமையை பெற்றுக் கொள்ளலாம்.




இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ள காரணத்தால் ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்களின் விமான சேவைகளுக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது என்று சதீஷ் தெரிவித்தார்.




கோவை விமான நிலையத்தில் டெல்லி, மும்பை நகரங்களுக்கு கூடுதல் விமான சேவைகளை வழங்கவும், சென்னை, பூனே உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகளை தொடங்கவும் ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.




"இதுகுறித்த கோரிக்கையை மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடுவிடம் வழங்கியுள்ளோம். விரைவில் புதிய சேவைகள் தொடங்கப்படும் என நம்புகிறோம்" என்று சதீஷ் கூறினார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...