வறட்சி காலத்தில் வன உயிரினங்களை பாதுகாக்க வனப்பகுதிக்குள் தாதுஉப்பு சத்து உணவுகள் மற்றும் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது- கோவை மாவட்ட வன அலுவலர் பேட்டி

கோவை வனப்பகுதியில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் வறட்சியினைத் தொடர்ந்து, வன உயிரினங்களுக்கு தாது உப்பு சக்தி கொண்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது என கோவை மாவட்ட வன அலுவலர் ராம சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் 7 வன சரகங்கள் உள்ளன. கோவை வனப்பகுதி 790 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது.

கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாத காரணத்தால் அனைத்து பகுதிகளிலும் வறட்சி நிலவிவருகிறது. வன உயிரினங்களுக்கு பல்வேறு பகுதிகளில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் லிட்டர் முதல் 10 ஆயிரம் லிட்டர்கள் கொள்ளளவு கொண்ட இந்த தொட்டிகள் கடந்த 3 வருடங்களுக்கு முன்னரே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. அவையனைத்தும் தற்போது நல்ல நிலையில் உள்ளன.

ஒவ்வொரு வன சரகத்திலும் குறைந்தது 7 இடங்களில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் அனைத்து உரினங்களும் இங்கு வந்து குடிநீர் அருந்தி செல்கின்றன. மழை பெய்தால் தான் வன உயிரிகள் வாழும்.

வனப் பகுதியை சுற்றி இருக்கும் கிராமத்திலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

கால்நடைகளும் வன உயிரினங்களும் வனத்தை ஒட்டி உள்ள பகுதிகளில் வந்து நீர் அருந்துவதால் தற்போது வனவிலங்குகள் அருந்தும் குடிநீரில் நோய் தடுப்பு மருந்துகள் கலக்கப்பட்டு வனத்துறையால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கால்நடைகளில் இருந்து வன உயினரினங்களுக்கு நோய்கள் பரவும் அபாயம் தடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வறட்சியால் ஏற்படும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டுள்ளது. வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் காட்டு தீ கண்காணிப்பாளர்கள் வனப்பகுதிக்குள் ரோந்து செல்கின்றனர். இதனால், காட்டுத் தீ பரவாமல் உள்ளது.

அதிகப்படியான வெயில் மற்றும் வறட்சியினை வனவிலங்குகள் தாங்கும் வகையில் அதிகப்படியான நீர் ஆதாரங்களும், தாது உப்பு சக்தி கொண்ட பொருட்களையும் வைத்துள்ளோம். இதனால் வன உயிரினங்கள் ஆரோக்கியமாக இருக்கும்" இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...