பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பாரதியார் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரத்தில் உயர்கல்வித்துறை உடனடியாக தலையிட வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் முதுகலைப் படிப்புகளில் பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

மாணவர்கள் கூறுகையில், இரண்டு ஆண்டுகளில் நிறைவடைய வேண்டிய முதுகலைப் படிப்புகளுக்கு இதுவரை முறையாக வகுப்புகள் நடத்தப்படவில்லை என்றும், இரண்டு ஆண்டுகளில் நடத்தப்பட வேண்டிய தேர்வுகளில் இரண்டு பருவத் தேர்வுகள் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இதற்கிடையில், மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணத்தை ஜூன் 25-ஆம் தேதிக்குள் செலுத்துமாறு பல்கலைக்கழகம் அறிவித்ததையடுத்து, மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பல்கலைக்கழக இணையதளம் மூலம் தேர்வுக் கட்டணத்தை செலுத்தியதாக தெரிவித்துள்ளனர்.

ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணம், நான்காம் பருவத் தேர்வுக்கான கட்டணமாக இணையதளத்தில் பதிவாகியுள்ளதாகவும், இதையடுத்து மூன்றாம் பருவத் தேர்வுக்கான கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், வகுப்புகள் எப்போது தொடங்கப்படும், பாடப்புத்தகங்கள் எப்போது வழங்கப்படும் என்பது குறித்தும் பல்கலைக்கழகம் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றும், இந்த ஆண்டுக்குள் மூன்றாம் மற்றும் நான்காம் பருவத் தேர்வுகள் நடைபெற்று படிப்பு நிறைவடையுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கல்வி தொடர்பான விவகாரங்களில் அலட்சியம் காட்டக் கூடாது என்றும், இந்த பிரச்சினையில் உயர்கல்வித்துறை அமைச்சர் உடனடியாக தலையிட்டு, அபராதத்தை ரத்து செய்து, தொலைதூரக் கல்வி மாணவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...