பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்: கோவையில் அமைச்சர் சம்பத் குமார் தொடங்கி வைத்தார்

கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 6 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில் தொடங்கி வைத்தார். கோயம்புத்தூர் மாவட்டத்தில் 501 பள்ளிகளைச் சேர்ந்த 56,550 மாணவர்கள் இத்திட்டத்தால் புதிதாகப் பயன்பெறுவர். மாநகராட்சி எல்லைக்குள் மட்டும் 130 பள்ளிகளைச் சேர்ந்த 21,764 மாணவர்கள் பயன்பெறுவார்கள். மொத்தம் மாவட்டத்தில் 1608 பள்ளிகளைச் சேர்ந்த 1,27,578 மாணவர்கள் காலை உணவுத் திட்டப் பயனாளிகளாவர்.


Coimbatore: கோவை மாநகராட்சி இரத்தினபுரி மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான விரிவுபடுத்தப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் வழிகாட்டுதலின் படி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனார், மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் முன்னிலையில், கோவை இரத்தினபுரி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் வே.சம்பத்குமார் குத்துவிளக்கேற்றி திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுக்கு உணவினை பரிமாறி, அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். அதனைத் தொடர்ந்து, பள்ளிவளாகத்தில் மரக்கன்றுகளை நடவு செய்தார்.



இதைத் தொடர்ந்து, அமைச்சர் வே.சம்பத்குமார் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர், பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்து மற்றும் கல்வி நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் காமராஜர் காலை உணவுத் திட்டம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்ததாக தெரிவித்தார். தமிழக முதல்வரின் தொலைநோக்கு சிந்தனையோடு கூடிய இந்த விரிவாக்கம், இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

அதைத் தொடர்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் பெருந்தலைவர் காமராஜரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில், இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தின் மூலம் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் 501 பள்ளிகளை சார்ந்த 56,550 பள்ளி மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள். ஏற்கெனவே, 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை 1107 பள்ளிகளை சார்ந்த 71,028 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர். இன்று விரிவாக்கம் செய்யப்பட்ட இத்திட்டத்தினை சேர்த்து, மாவட்டம் முழுவதும் 1608 பள்ளிகளைச் சார்ந்த 1,27,578 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள். இத்தகைய திட்டத்தினை விரிவாக்கம் செய்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் வே.சம்பத்குமார் தெரிவித்தார்.



இன்று, பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்ட விரிவாக்கத்தின் கீழ், கோவை மாநகராட்சியில், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 130 பள்ளிகளை சார்ந்த 21,764 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள். ஏற்கெனவே செயல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 21,242 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வருகிறார்கள். ஆகமொத்தம், மாநகராட்சிக்கு உட்பட்ட 249 பள்ளிகளைச் சார்ந்த 43,006 மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர், பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்ட விரிவாக்கத்தின் தொடக்க விழாவினை காணொலி காட்சி மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டதை, அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகராட்சி ஆணையாளர், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வுகளின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியா, மாநகர தலைமைப் பொறியாளர் விஜயகுமார், மத்தியமண்டல தலைவர் மீனாலோகு, உதவி ஆணையர் கணேசன், மாநகராட்சி கல்வி அலுவலர் குணசேகரன், உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார், மாமன்ற உறுப்பினர்கள் காயத்திரி, பிரபாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் சீதாலட்சுமி, மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், உதவி பொறியாளர் குமரேசன், சுகாதார ஆய்வாளர் சரவணக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

LPF and Affiliated Unions Protest in Coimbatore Against Centre and State Governments’ Labour Policies

The Coimbatore District Labour Progressive Federation (LPF) Council and affiliated unions staged a protest near the Red...

EPFO Wage Ceiling Revision: Coimbatore Officials Explain Benefits for Formal Sector Employees

The Union Cabinet’s decision to raise the EPFO mandatory coverage wage ceiling from ₹15,000 to ₹25,000, effective Septem...

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி ம...

கோவையில் கைவினைஞர் தனித்தேர்விற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

2027 ஜூலை மாதம் DGT நடத்தும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித் தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள விரும்புவோர்...

மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மலையடிபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நாளை (23.09.2026) காலை 9 மணி முதல் மதியம் 2 மண...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (23.09.2026) மின்தடை

கோவை மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 23, 2026 அன்று காலை 9 மணி முதல...