அரசுக்குடியிருப்பில் வசிக்கும் பணியாளர்களுக்கு மின்சார வசதி கோரி கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


வீடு கட்டித்தரவும், அரசுக்குடியிருப்பில் வசித்து வரும் பணியாளர்களுக்கு மின்சார வசதி செய்து தர வேண்டியும் கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை மாநகராட்சியில் தூய்மைப்பணி செய்யும் ஊழியர்களுக்கு வெறைட்டி ஹால் பகுதியிலுள்ள சிஎம்சி காலனியில் அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இங்கு நானூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் மின்சார வசதியின்றி வசித்து வருகின்றனர். ஒப்பந்த தொழிலாளர்கள் பலர் சாலை ஓரங்களிலும் வசித்து வருகின்றனர்.

சிஎம்சி காலனியில் வசிக்கும் தூய்மைப்பணி ஆய்வாளருக்கு மட்டும் மின்சார வசதி, குடியிருப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் தூய்மை பணியாளர்கள் பல முறை இதுகுறித்து மனுக்கள் அளித்தும் மாநகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது.

மேலும் சிஎம்சி காலனியில் வசிக்கும் தூய்மை பணியாளர்களை மாநகரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வெள்ளலூரில் புதிதாக அமைக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் இடம்பெயர மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இடம் பெயர்ந்தால், தூய்மை பணியாளர்கள் காலை 5.30 மணிக்கு பணிக்கு வருவதற்கு பேருந்து வசதிகள் எதுவும் இல்லாத நிலை உள்ளது. மேலும், நீண்ட தொலைவில் இருந்து பேருந்தில் வருவதற்கான கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் வழங்குவதில்லை. இதனால் சம்பளத்தின் பெரும் பகுதியை பேருந்து கட்டணத்திற்கே செலவிட வேண்டியிருக்கும் என குற்றம் சாட்டுகின்றனர்.



தற்போது சிஎம்சி காலனியில் புதிதாக வீடுகளை அமைத்து தர இடம் இருந்தும் மாநகராட்சி நிர்வாகம் அமைத்துத் தராததைக் கண்டித்து சமூக நீதிக்கட்சியுடன் இணைந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மாநகராட்சியை முற்றூகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனையடுத்து மாநகராட்சி ஆணையாளரிடமும் கோரிக்கைகள் குறித்து மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...