ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஓபிஎஸ் தலைமையில் சிறப்பாக செயல்பட்டது- எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி. அருண்குமார்

கோவை, காந்திபுரத்திற்கு உட்பட்ட கிராஸ்கட் ரோடு லட்சுமி காம்ப்ளக்ஸ் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை வடக்கு மண்டலம் எம்.எல்.ஏ பிஆர்ஜி அருண்குமார் கூறுகையில், இரு அணிகள் இணைப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஓராண்டு அதிமுக ஆட்சி ஜெயலலிதா, ஒபிஎஸ் தலைமையில் சிறப்பாக இருந்தது. தற்போதைய ஆட்சி பற்றி உங்களுக்கே தெரியும். அடுத்த மாதம் 25-ம் தேதி கோவையில் அதிமுக புரட்சி தலைவி அம்மா அணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற உள்ளது என்றார்.

இதனைத்தொடர்ந்து, ஓ.பண்ணீர் செல்வம் உடல்நலம் குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு சிறப்பாகவும், நலமாகவும் ஓபிஎஸ் உள்ளார் என பிஆர்ஜி அருண்குமார் பதிலளித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...