அகில இந்தியக் கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நேற்று துவக்கம்


52வது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும் 16 வது ஆண்டு பெண்கள் பங்கேற்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கியது.

அகில இந்திய அளவில் முன்னணி அணிகள் பங்கேற்கும் 52வது ஆண்டு ஆண்கள் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை,மற்றும் 16ம் ஆண்டு பெண்கள் பங்கேற்கும் சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை அகில இந்திய கூடைப்பந்து போட்டிகள் நேற்று துவங்கி  வரும் 31ம் தேதி வரை கோவை வ.உ.சி. பூங்கா மாநகராட்சி விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது. ஆண்கள் ஏ பிரிவில் வருமான வரித்துறை அணி, இந்திய விமான படை, குஜராத் விளையாட்டு கழக அணி, மத்திய ரிசர்வ் போலீஸ் அணியும் பி பிரிவில் ஐ.ஓ.பி, இந்திய ரயில்வே, இந்திய கப்பற்படை மற்றும் கோவை மாவட்ட கூடைபந்தாட்ட கழகம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.



பெண்கள் ஏ பிரிவில் தென் மத்திய ரயில்வே, தென்னக ரயில்வே,கிழக்கு ரயில்வே அணியும் பி பிரிவில் கேரள மின்வாரிய அணி,சட்டீஸ்கர், கூடைபந்து கழக அணி, மற்றும் கோவை மாவட்ட கூடை பந்தாட்ட கழக அணிகளும் பங்கேற்கிறன. லீக் சுற்று முறையில் நடைபெறும் இப்போட்டிகளில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் அரை இறுதி போட்டியில் விளையாட தகுதி பெறும். நேற்று நடைபெறும் போட்டிகளில் பெண்கள் பிரிவில் 3 போட்டிகளும் ஆண்கள் பிரிவில் 2 போட்டிகளும் நடைபெற்றது.

முதலாவது ஆண்கள் பிரிவில் நடைபெற்ற போட்டியில் இந்திய கப்பற்படை அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி விளையாடியது.விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் இரு அணி வீர்ர்களும் மாறி மாறி புள்ளிகள் எடுத்ததால் யார் வெற்றி பெறவார்கள் என ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் கோவை மாவட்ட கூடைபந்து கழக அணி 94-83 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.பெண்கள் பிரிவின் முதல் ஆட்டத்தில் கூடைபந்து கழக அணியை எதிர்த்து சட்டீஸ்கர் விளையாடியது. இதில் சட்டீஸ்கர் அணி 57-43 என்ற புள்ளிகணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவதாக நடைபெற்ற ஆண்கள் போட்டியில் குஜராத் அணியுடன் சி.ஆர்.பி.எப் அணி விளையாடியது.



இதில் குஜராத் அணி  76-66 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாவது பெண்கள் பிரிவிற்கான போட்டியில் தெற்கு ரயில்வே அணி கிழக்கு ரயில்வே அணியுடன் மோதியது. இதில் கிழக்கு  ரயில்வே அணி 50-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் கேரளா மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி விளையாடியது. இதில் கேரளா மின்சார வாரிய அணி 74-48 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை ஆண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர்.என்.மகாலிங்கம் கோப்பையும், அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற தவறிய இரு அணிகளுக்கு தலா ரூ.15 ஆயிரமும், மேலும் தேர்வு செய்யப்பட்ட அணிக்கு நன்நடத்தை ரேணுகா ராமநாதன் நினைவு விருது வழங்கப்படுகிறது.சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் கோப்பை பெண்கள் பிரிவில் வெற்றி பெறும் அணிக்கு  முதல் பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும், இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் சுழற் கோப்பையும் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற தவறிய இரு அணிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...