இதயம் துடிப்பு இருக்கும்போதே மற்றொரு நோயாளிக்கு இதயத்தை பொறுத்தி கே.எம்.சி.எச் மருத்துவர்கள் சாதனை

இதயம் துடித்துக்கொண்டிருக்கும் போதே மற்றொரு இதயத்தை நோயாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் பொறுத்தி கோவை மெடிக்கல் செண்டர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இதய நோய் உள்ளவர்களுக்கு இதயத்தை மாற்றிவைக்கும் ஆர்த்தோடாபிக் இதய மாற்று அறுவை சிகிச்சையை தற்போது உலகம் முழுவதும் மருத்துவர்கள் செய்து வருகின்றனர்.



இந்நிலையில் பலவீனமாக இருந்த இதயத்துடன் தானமாக பெறப்பட்ட மற்றொரு இதயத்தை அறுவை சிகிச்சை மூலம் 45 வயது நோயாளிக்கு பொறுத்தி கோவை மெடிக்கல் செண்டர் மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.



ரத்தத்தை உடலுக்குள் உந்தி தள்ள முடியாத நிலையில் 10 சதவீதம் மட்டுமே செயலாக்கத்துடன் இருந்த நோயாளி ஒருவருக்கு இச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மருத்துவமனை தலைவர் நல்லா ஜி பழனிச்சாமி மற்றும் இச்சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் பிரசாந்த் வைத்தியநாதன் ஆகியோர் தெரிவித்தனர். மிகவும் சிக்கலான இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாகவும் இதன் மூலம் இந்தியாவில் இரண்டு இதயங்களை கொண்ட முதல் மனிதராக அந்நோயாளி உருமாறியுள்ளதாகவும் அவர்கள் அப்போது தெரிவித்தனர்.



மேலும் இதயம் மாற்று அறுவை சிகிச்சையின் போது நுரையீரலில் அழுத்தம் இருந்தால் அச்சிகிச்சையை இதுவரை மருத்துவர்கள் தவிர்த்து வந்துள்ளதாகவும் தற்போது ஹெட்டிரோடாபிக் என்ற இந்த சிகிச்சை மூலம் உலகம் முழுவதும் இது போன்ற சிக்கலான இதயம் பொறுத்தும் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள முடியும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மூளைச்சாவு அடைந்த பெண்ணிடம் இருந்து பெறப்பட்ட இதயத்தை தற்போது இந்நோயாளிக்கு பொறுத்தி உள்ளதாகவும் அவர் தற்போது உடல்நிலை தேறி வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...