உக்கடம் பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடை விலங்குகளால் ஏற்படும் சாலை விபத்தை தடுக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

கோவை மாநகராட்சியில் அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு இடையூராக சாலையில் சுற்றித்திரியும் மாடு, குதிரை போன்ற கால்நடைகளை பிடிக்கும் பணியினை மேற்கொண்டு, விதி மீறும் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கவும், பிடிக்கப்பட்ட கால்நடைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் உரிமையாளர்கள் திரும்ப பெறாவிட்டால் அவற்றை மாநகராட்சியின் மூலம் நரசிபுரம் கிராமத்தில் செயல்படும் வெள்ளிங்கிரி கோசாலையில் விடப்படவேண்டும் எனவும் மேலும், மண்டல சுகாதார அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அதன் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என ஜூன் 1ம் தேதி அன்று மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.



ஆனால், இதுவரை மாநகராட்சி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை உக்கடம் பகுதியில் பேருந்து நிலையத்தில் அருகில் உள்ள உக்கடம் காய்கறி மார்க்கெட் பகுதியில் இருந்து உக்கடம் சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிகின்றன. தினமும் காலை முதல் இரவு வரை இப்பகுதியில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என பொதுமக்கள் பலர் வந்து செல்லும் முக்கிய பகுதியில் இது போன்ற கால்நடை விலங்குகளால் பேருந்துகள் மற்றும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.



இதேபோல், உக்கடம் 86-வது வார்டு பொன்விழா நகர் பகுதியில் முன்பு உள்ள குப்பை தொட்டிகளில் தினத்தோறும் குப்பை வழிந்து சாலை முழுவதும் சிதறிக்கிடப்பதால் அப்பகுதியில் சுற்றித் திரியும் மாடுகள் இங்கு தினமும் மேய்ந்து வருகிறது. இப்பகுதியில் குப்பை தொட்டிகள் குறைந்த அளவில் உள்ளதால் இதுபோன்ற சூழல் ஏற்படுகிறது. இதனால், மாடுகள் இங்கு அதிக அளவில் வளம் வருவதால், இப்பகுதியில் சாலைகளில் இருசக்கர வாகனத்தில் வருபவர்களுக்கு அதிகம் விபத்துக்கள் ஏற்படுகிறது.

மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன் உத்தரவின்பேரில், இந்தப் பணிக்காக அமைக்கப்பட்ட குழுவினர்கள் மண்டல சுகாதார அலுவலர்கள் தலைமையில் அந்தந்த மண்டலத்திலுள்ள சுற்றித்திரியும் கால்நடைகளை பிடிப்பதற்கு அந்தந்த மண்டல குழுவே பொறுப்பேற்க உத்தரவிட்டார். எனவே, உக்கடம் மற்றும் அப்பகுதியில் சுற்றித் திரியும் கால்நடை விலங்குகளை அந்த மண்டல அலுவலர்கள் உடனடியாக பிடித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இது குறித்து, தெற்கு மண்டல சுகாதார அலுவலரிடம் பேசுகையில்; தெற்கு மண்டலத்தில் செட்டிபாளையத்திற்கு உட்பட்ட தெருவில் பொது மக்களுக்கு இடையூராக சுற்றித்திரிந்த 6 மாடுகள் பிடிக்கப்பட்டு ரூபாய் 1800 வரை மாடு உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் தெற்கு மண்டலம் 86-வது வார்டு பொன்விழா நகர் பகுதியில் பொது மக்களுக்கு இடையூராக சுற்றித்திரியும் மாடுகளை உதவி சுகாதார அலுவலர்கள் மூலம் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். 

மத்திய மண்டல சுகாதார அலுவலரிடம் பேசுகையில், இதுவரை மத்திய மண்டலத்தில் 4 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் உரிமையாளர்கள் மீது ரூபாய் 1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்த பின்னர் உரிமையாளர்கள் வராததால், உக்கடம் மற்றும் மார்க்கெட் பகுதியில் சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து பாதுகாப்பான இடத்தில் வைக்க போதிய இடவசதி இல்லை. தற்போது இடவசதி பற்றி சுகாதார மண்டல அலுவலரிடம் பேசப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...