3 ஆண்டுகளுக்கான நலத்திட்டங்களின் வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் - அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேட்டி

3 ஆண்டுகளுக்கு தேவையான நலத்திட்டங்களுக்கான வரை அறிக்கைகளுடன் தமிழக அரசு மத்திய அரசை அணுகினால் உடனடியாக நிதி ஒதுக்கி தரப்படும் என மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கய்யா நாயுடு தெரிவித்துள்ளார்.



கோவையில் நடைபெற்ற அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தலைப்பிலான மத்திய அரசின் 3 ஆண்டு சாதனைகளை விளக்கும் நிகழ்ச்சியில் அவிநாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தொழில்துறையினரிடையே உரையாற்றினர். அப்போது அவர் கூறியதாவது:-

முந்தைய ஆட்சி காலத்தில் 2ஜி, நிலக்கரி உள்ளிட்ட ஊழல்கள் புரையோடிப்போயிருந்ததாக குற்றம்சாட்டிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மத்திய அரசின் மீது ஏதேனும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதா எனவும் கேள்வி எழுப்பினார். மத்தியில் திறைமையான தலைவர், நிலையான ஆட்சி நடைபெறுவதாக கூறிய அவர் மத்திய அரசின் பல்துறை சாதனைகளையும் பட்டியலிட்டார். 



மத்தியபிரதேசத்தில் உற்பத்தி அதிகரித்துள்ள போதும் தேவை குறைந்துள்ளதே விவசாயிகளின் பிரச்சனை எனவும் குறிப்பிட்டார். வளர்ச்சி என்பதுதான் பிரதமர் மோடியின் முக்கிய இலக்கு எனக்கூறிய அவர் புதிய இந்தியாவை அமைக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார். 

அடுத்த 2 மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 50 நகரங்கள் கூடுதலாக விமான சேவை மூலம் இணைக்கப்படும் என தெரிவித்த அவர் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கூடுதலாக பலர் வருமான வரி செலுத்த முன்வந்துள்ளதால் தற்போது வருமான வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...