ஓய்வூதியம் வழங்கக் கோரி சத்துணவு அமைப்பாளர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு


மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வு பெற்றோருக்கு முறையாக ஓய்வூதியம் வழங்கக் கோரி இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

மதுக்கரை ஒன்றியத்தில் சத்துணவு அமைப்பு சமையலர், உதவியாளர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற எங்களுக்கு 2017 ஜனவரி முதல் மே மாதம் வரை ஐந்து மாதங்களாக ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. 

மற்ற ஒன்றியங்களில் வழங்குவது போல் மதுக்கரை ஒன்றியத்திலும் மாதாமாதம் ஓய்வூதியம் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். ஓய்வு பெற்று நான்கு ஆண்டுகள் கடந்தும் ஓய்வூதிய பணப்பலன்கள், ஒட்டுமொத்த தொகை, பிஎஃப் எதுவும் கிடைக்காமல் சத்துணவு பணியாளர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

எனவே, ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கவும், மதுக்கரை ஒன்றியத்தில் மாதம் தவறாமல் ஓய்வூதியம் கிடைக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...