வாலங்குளம் குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீடுகள் வழங்க கோரி மாநகராட்சி ஆணையரிடம் மனு


கோவை LGB நகர் ஹைவே காலனி பின்புறம் வாலங்குளம் பகுதியில் அகற்றப்பட்ட குடிசை பகுதி மக்களுக்கு உக்கடம் பகுதியில் கட்டப்பட்டு வரும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிகளில் வீடுகள் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. LGB நகர் பகுதில் இருந்த சுமார் 1௦௦௦ குடிசை வாழ் மக்களை வேறு வீடு தருவதாகவும் வாலங்குளம் பகுதியில் சுத்தம் செய்வதாகவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு மக்களை கட்டாயப்படுத்தி அப்புற படுத்தி உள்ளனர். தற்போது, குடிசை பகுதிகளில் வசிக்கும் மக்களை கட்டாயப்படுத்தி அரசால் வெளியற்றிய பின்னர் அந்த இடம் தற்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குளத்தினில் கட்டிடகழிவுகள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன. மேலும் குளத்தினில் நடைபாதை அமைக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 



ஆனால், அவர்களில் சுமார் 350 குடிசை வாசிகளுக்கு மாற்று வீடு தரப்படவில்லை. எனவே, அப்பகுதியை சேர்ந்த குடிசை வாசி மக்கள் இன்று கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். மேலும், மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். இது குறித்து குடிசை மாற்று வாரியம் அலுவரை சந்திப்பதாக அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...