கோவையில் மாட்டு தலையுடன் போராட்டம் நடத்திய ஆதித்தமிழர் பேரவையினர் கைது

மத்திய அரசு மிருகவதை சட்டத்தில் திருத்தம் செய்து புதிய உத்தரவு ஒன்றை கடந்த மாதம் வெளியிட்டது. அந்த உத்தரவின்படி, நாடு முழுவதும் இனி மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய முடியாது என்று தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



மத்திய அரசின் இந்த திடீர் உத்தரவால் நாடெங்கிலும் பெரும் எதிர்ப்பலைகள் கிளம்பின. பல கட்சி தலைவர்கள் தங்கள் எதிர்ப்புகளை தொடர்ந்து தெரிவித்தும் வருகின்றனர். கேரளா மற்றும் கர்நாடகா அரசுகள் கடுமையான எதிர்ப்பினை நேரடியாக பதிவு செய்தன.



இந்நிலையில், மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு ஆதித்தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது, சிலர் மாட்டின் தலையுடன் வந்து மத்திய அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து, அங்கிருந்த போலீசார் மாட்டு தலையை பறிமுதல் செய்தனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...