மண் சட்டிகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த விவசாயிகள்

கோவை மாவட்டத்தில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனுமதி வழங்கக் கோரி வண்டல் மண் சட்டிகளுடன் வந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மனு ஒன்றை அளித்தனர். அதில் "கோவை மாவட்டத்தில் உள்ள பொதுப்பணித்துறை, பேரூராட்சிகள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர் நிலைகளில் வண்டல் மற்றும் கிராவல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே மண் எடுக்க அனுமதி வழங்கியுள்ளது. மாவட்டத்தில் உள்ள மற்ற நீர் நிலைகளிலும் விவசாயிகள் வண்டல் மண் எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய அவ்வமைப்பின் மாவட்ட தலைவர் பழனிச்சாமி, மாவட்டத்தில் நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தால் விவசாயிகள் பயனடைவார்கள். நீர் நிலைகளும் தூர்வாரப்படும்' என்றார். 

முன்னதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த விவசாய சங்கத்தினர் கையில் வண்டல் மண் சட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...