மரம் வடிவத்திலான வை-ஃபை மற்றும் காற்று மாசுபாட்டினை அளக்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சியில் அறிமுகம்

கோவை மாநகராட்சியில் வை-ஃபை வசதியுடன் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' மாநகராட்சி அலுவலகத்தில் முதல் முதலில் அறிமுகபப்டுதப்படுள்ளது. இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மாநகராட்சிகளை மேம்படுத்தும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சூரிய ஆற்றலில் இயங்கும் 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்பட்டுள்ளது.

மரம் வடிவிலான ஸ்மார்ட் ட்ரீ:



மரத்தைப் போன்று வடிவமைப்பில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட் ட்ரீ இந்தியாவில் முதல்முறையாக பொது மக்களுக்கு நிழல் தரும் வகையிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு 'ஸ்மார்ட் ட்ரீ' அமைப்பதற்கு 3.5 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. 9 அடி ஆழத்தில் கான்ங்கீரட் மூலமாக தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் உயரம் 12 அடியாகும். 400 சதுரஅடியில் தரை தளத்தில் செயற்கை புல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பொதுமக்கள் அமருவதற்கு இருப்பிடம் வசதியும் இந்த ஸ்மார்ட் ட்ரீ-யின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 6 பேனல்கள் மூலம் 120 சதுரடியில் மேல் பகுதியில் சோலார் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சூரிய ஆற்றல் கொண்ட சோலார் மூலம் ஒரு நாளைக்கு 8 யூனிட் வரை மின்சாரம் பெற முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட் ட்ரீயில் இலவச வை-ஃபை வசதியும், காற்று மாசுபாட்டினை அளக்கும் கருவியும் இதில் அமைக்கப்பட்டுள்ளது.



இது குறித்து பேசிய கோவை மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயன், 'முதல்கட்டமாக மாநகராட்சி முழுவதும் இது போன்ற சுற்றுச்சூழலுக்கு நன்மையான 30 'ஸ்மார்ட் ட்ரீ' அமைக்கப்படவுள்ளது. பொதுமக்கள் தரப்பிலும் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. டெல்லியிலுள்ள ஸ்மார்ட் சிட்டி ஆணையமும் இத்திட்டத்தைப் பாராட்டியுள்ளது' எனக் கூறினார்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...