பாதுகாக்கப்படுமா குமிட்டிபதி குகை ஓவியங்கள் ?

‘தமிழர் என்றொரு இனமுண்டு, அவர்களுக்கென்று தனி குணமுண்டு’ என்ற வரிகளுக்கேற்ப தமிழர்களின் பண்பாடும், கலாச்சாரமும் உலகம் மெச்சும் பண்புகளை பெற்றுள்ளது. பண்டைய தமிழர்களின் கலாச்சாரத்தை இன்றைய தமிழர்களுக்கு மட்டுமின்றி உலகிற்கே பறைசாற்றுபவை நினைவுச் சின்னங்கள். அவை முறையாக பாதுகாக்கப்படுகிறதா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.



கோவையில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பதிமலையில் இருக்கும் குகை ஓவியங்கள் பாதுகாக்கப்படாத நிலையில் இருப்பது தமிழர்களிடையே கலக்கத்தை உண்டாக்கியுள்ளது.



கோவை மாவட்டத்தில் தமிழக- கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது குமிட்டிபதி கிராமம். இந்த கிராமத்தில் பதி மலை என்ற மலைக்குன்று அமைந்துள்ளது. குன்றின் மேற்பகுதியில் முருகன் கோவிலும், கீழ் பகுதியில் பண்டைய தமிழர் வரைந்த குகை ஓவியங்களும் அமைந்துள்ளது.



வெள்ளை நிற மையால் வரையப்பட்டுள்ள இந்த குகை ஓவியங்கள் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்டது எனவும், யானையை மனிதன் ஒருவன் இயக்குவதை இந்த ஓவியங்கள் குறிப்பதாகவும் கூறப்படுகிறது.

முந்தைய கால கட்டத்தில் பதிமலை குன்று பாண்டியர்கள் கல்வி பயிலும் இடமாக இருந்ததாகவும், அதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் இந்த மலைக்குன்றை ‘பாண்டியன் பள்ளிக்கூடம்’ என்று அழைப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.



இப்படியான வரலாற்று சிறப்பு மிக்க இடம், சாரியான முறையில் பாதுகாக்கப்படாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. குகை ஓவியங்கள் உள்ள பகுதி முழுவதும் மது பாட்டில்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வருகைதர தயங்குகின்றனர்.

எனவே, அரசும், மாவட்ட நிர்வாகமும் இந்த வரலாற்று சின்னத்தை மீட்டெடுத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...