மறைந்த பத்திரிகையாளர் அவனாசிலிங்கம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் கண்கலங்கிய பத்திரிகையாளர்கள்

கடந்த 1975 ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், அவினாசியில் ஐயாசாமி, அம்புஜம் என்ற தம்பதியினருக்கு மகனாக பிறந்தவர் அவனாசிலிங்கம். இவர், சன் தொலைக்காட்சியில் 20 வருடங்களாக பத்திரிகையாளராக பணியாற்றிய நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு உயிரிழந்தார்.



நேர்மையான பத்திரிகையாளராகவும், மக்கள் பிரச்சனைகளை ஊடகத்தின் வாயிலாக தீர்த்து வைத்த சமூக சேவகராகவும் வாழ்ந்து மறைந்த அவனாசிலிங்கத்தின் நினைவேந்தலை அனுசரிக்கும் விதமாக அவர் மறைந்த நாளன்று பத்திரிகையாளர்கள் நினைவேந்தல் செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்ச்சியின் போதும் ஏழை, எளிய மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று அவனாசிலிங்கம் அவர்களின் 4-ம் ஆண்டு நினைவேந்தல் கோவை ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அனுசரிக்கப்பட்டது.



இந்நிகழ்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊடகத்துறை வாயிலாக அவனாசிலிங்கம் செய்த சேவைகள் குறித்து உரையாற்றினர். 

நெகிழ்ச்சியான பத்திரிகையாளராய் மட்டுமின்றி நல்ல மனிதராக வாழ்ந்த அவனாசிலிங்கத்துடன் கழித்த தருணங்களை சக பத்திரிகையாளர்கள் கண்ணீர்மல்க வெளிப்படுத்தினர்.



நிகழ்வின் முடிவில், பத்திரிகையாகர்கள் சார்பில் மலைவாழ் மக்கள், மாணவர்கள் மற்றும் நூலகத்திற்கான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...