கோவையில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு பயிற்சி

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாநகராட்சி சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளது. கோவையில் பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய இடங்களில் உள்ள சாலையோர வியாபாரிகளால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அதனால், அனைத்து சாலையோர வியாபாரிகளையும் கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுவரை, 4,000 பேருக்கு அடையாள அட்டை மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்டு உள்ளது. 



இதற்கென, மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தலைமையில் அமைக்கப்படும் சாலையோர கமிட்டியில், நகர் நல அலுவலர், போக்குவரத்து போலீசார், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் வியாபாரிகள் பிரதிநிதிகள், உறுப்பினர்களாக தேர்வு செய்யப்படுவர். இக்கமிட்டியினர், மாநகராட்சி பகுதியில் ஆய்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத இடத்தை சாலையோர வியாபாரிகளுக்காக தேர்வு செய்யப்படும். அங்கு, வியாபாரிகளை வகைப்படுத்தி இடம் ஒதுக்கப்படும்.



இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறிகையில், சாலையோர வியாபாரிகளுக்கு, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு உதவிகள் செய்கின்றன. அவற்றை வியாபாரிகள் அறியாமல் உள்ளனர். அதனால், சிறப்பு பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். முன்னோடி வங்கி மற்றும் நபார்டு வங்கி அதிகாரிகள், திட்ட அலுவலர், உணவு கலப்பட தடுப்பு பிரிவினர், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்பர். அடையாள அட்டை பெற்றுள்ள சாலையோர வியாபாரிகள் அழைக்கப்படுவர். மத்திய - மாநில அரசுகள் வழங்கும் நிதியுதவி, மானியம், உணவு பண்டங்கள் தயாரிப்பது, விற்பதில் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை, குப்பையை கொட்ட வேண்டிய இடங்கள் உள்ளிட்டவற்றை, அலுவலர்கள் விளக்குவர். திட்டம் தொடர்பான தொகுப்புரை புத்தகம் தயாராகி வருகிறது. விரைவில் பயிற்சி அளிக்கப்படும்.' இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...